Read in English
This Article is From Dec 06, 2019

“உ.பி போலீஸ்… அவங்கள பார்த்து கத்துக்கோங்க!”- Telangana போலீஸை முன்னுதாரணமாக வைக்கும் மாயாவதி

"இன்று ஐதராபாத் போலீஸ் செய்துள்ள என்கவுன்ட்டர் சம்பவத்தைப் பார்த்து, உத்தர பிரதேச போலீஸார் கற்றுக் கொள்ள வேண்டும்," - Mayawati

Advertisement
இந்தியா Edited by

'உ.பி மற்றும் டெல்லி காவல் துறை, தங்களது அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும்'

Lucknow:

ஐதரபாத்தில் பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்ட 4 பேரை இன்று என்கவுன்ட்டர் செய்தது ஐதராபாத் போலீஸ். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, “உத்தர பிரதேச போலீஸ் அவர்களைப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும்,” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். 

“உத்தர பிரதேசத்தில் பலாத்கார சம்பவங்கள் தினந்தோறும் நடைபெறுகிறது. அது ஒரு மாவட்டத்தில் மட்டுமல்ல, அனைத்து மாவட்டத்திலும் அதுதான் நிலைமை. இளம் பெண்களோ, வயதானவர்களோ, யாருக்கும் பாதுகாப்பு இல்லை. உத்தர பிரதேசத்தில் காட்டு ராஜ்ஜியம் நடைபெறுகிறது.

நான் மாநிலத்தின் முதல்வராக இருந்தபோது, பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட என் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுத்தேன். இன்று ஐதராபாத் போலீஸ் செய்துள்ள என்கவுன்ட்டர் சம்பவத்தைப் பார்த்து, உத்தர பிரதேச போலீஸார் கற்றுக் கொள்ள வேண்டும். உ.பி மற்றும் டெல்லி காவல் துறை, தங்களது அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும்,” என்று மாயாவதி விரிவாக கருத்து தெரிவித்துள்ளார். 

Advertisement

ஐதராபாத்தில் பெண் மருத்துவர் ஒருவர் சில நாட்களுக்கு முன்னர், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தியாவையே கலங்கடித்த இச்சம்பவத்தில் தொடர்புடையதாக குற்றம் சாட்டி 4 பேரை கைது செய்தது ஐதராபாத் போலீஸ். இன்று அந்த 4 பேரையும் குற்றம் நடந்த இடத்துக்கு அழைத்துச் சென்று, விசாரணை செய்ய போலீஸ் முயன்றுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது 4 பேரும் தப்பித்துச் செல்ல முற்பட்டதாகவும், அதனால் என்கவுன்ட்டரில் அனைவரையும் கொன்றதாகவும் போலீஸ் தரப்பு விளக்கம் கொடுத்துள்ளது. 

Advertisement