हिंदी में पढ़ें Read in English
This Article is From Jul 15, 2019

உத்தரபிரதேசத்தில் பசுக்கள் உயிரிழப்பு! அரசு அதிகாரிகள் 8 பேர் சஸ்பெண்ட்!!

உத்தர பிரதேசத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் பசுக்களை பாதுகாக்கும் கோசாலையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. முறையாக பராமரிக்கும்படி அதிகாரிகளுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

Advertisement
இந்தியா Edited by
Lucknow:

உத்தரபிரதேசத்தில் பசுக்களை பாதுகாக்கும் கோசாலையில் பசுக்கள் உயிரிழந்ததை தொடர்ந்து அரசு அதிகாரிகள் 8 பேரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

மற்ற மாநிலங்களை விட பசுக்களின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் மாநிலமாக உத்தரபிரதேசம் உள்ளது. இங்கு பசுக்களுக்கென சிறப்பு பாதுகாப்பு மையங்கள் (கோசாலைகள்) அமைக்கப்பட்டு அவைகள் பாதுகாக்கப்படுகின்றன. இவை மாநில அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்றன.

இந்த நிலையில் அயோத்யா மற்றும் மிர்சாப்பூர் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பசுக்கள் உயிரிழந்து வருகின்றன. இதற்கு போதிய சுகாதாரமின்மை, மழை மற்றும் மின்னல் தாக்கியது ஆகியவை முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பசுக்கள் உயிரிழந்தது தொடர்பாக அதிகாரிகள் 8 பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரபிரதேச அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 

2017-ல் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு உத்தர பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தது. அப்போதிலிருந்து பசுக்கள் பாதுகாப்பு என்பது மாநில அரசின் முக்கிய கொள்கையாக கடைபிடிக்கப்படுகிறது. 

Advertisement

மாநிலம் முழுக்க கோசாலைகளை அமைக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் திட்டமிட்டுள்ளார். இதற்கிடையே பிரக்யாராஜ் மாவட்டத்தில் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் மின்சாரம் தாக்கி சுமார் 30 பசுக்கள் உயிரிழந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Advertisement