பத்திரிக்கையாளர் ஒருவர் இந்த வீடியோவை ட்வீட் செய்து நொய்டா காவல்துறையை டேக் செய்திருந்தார்.
New Delhi: டெல்லியில் தாத்ரியில் திருமண ஊர்வலத்தின் போது கையில் துப்பாக்கியை வைத்தபடி நடனமாடிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வீடியோவில் ஒரு நபர் நீல நிற ஜாக்கெட், வெள்ளை சட்டை மற்றும் நீல நிற பேண்ட் அணிந்த ஒருவர் கையில் துப்பாக்கியுடன் நடனமாடுகிறார்.
பத்திரிக்கையாளர் ஒருவர் இந்த வீடியோவை ட்வீட் செய்து நொய்டா காவல்துறையை டேக் செய்திருந்தார்.
மூத்த காவல்துறை அதிகாரி, வீடியோவில் உள்ள நபர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
வடஇந்தியா பகுதிகளில் பொது இடத்தில் ஆயுதங்களை காட்டுவது என்பது அதிகாரத்தின் அடையாளமாக கருதப்படுகின்றன.
பல மாதங்களுக்கு முன்பு உத்தரகண்ட் மாநிலத்தை சேர்ந்த எம்.எல்.ஏ தனிப்பட்ட விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கியை காட்டி நடனமாடும் காட்சி இணையத்தில் வெகுவாக பரவியது. அதன்பின் எம்.எல்.ஏ ராஜினாமா செய்தார்.
வீடியோவில் காணப்படுவது போல் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவது மாநிலத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.
அலகாபாத் உயர்நீதிமன்றம் ஆகஸ்ட் மாதம் மாநிலத்தில் ஒலி மாசுபாட்டிற்கு வழிவகுக்கும் இசைக்கருவிகள் மீது முழுமையான தடை விதித்தது