இதயம் வலது பக்கத்தில் உள்ளது. (Representational image)
Kushinagar: உத்தர பிரதேசத்தில் குஷிநகரில் உள்ள பத்ரனா கிராமத்தில் வசிக்கும் ஜமாலுதீன் என்ற நபருக்கு உடல் உறுப்புகள் அனைத்தும் தவறான பக்கத்தில் இடம்பெற்றுள்ளன.
பொதுவாக அனைத்து மனிதர்களுக்கும் இதயம் இடது புறத்திலும் கல்லீரல், பித்தப்பை வலது புறத்திலும் இருக்கும்.
ஜமாலுதினுக்கு கல்லீரல் மற்றும் பித்தப்பை இடது புறத்தில். இருக்கிறது. இதயம் வலது பக்கத்தில் உள்ளது.
வயிற்று வலி இருப்பதாக ஜமாலுதீன் மருத்துவரிடம் சென்றுள்ளார். அப்போது எக்ஸ்ரே மற்றும் அல்ட்ரா சவுண்ட் அறிக்கைகளைக் கண்டு மருத்துவர் அதிர்ச்சியடைந்தார். அனைத்து உறுப்புகளும் தவறான பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.
அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் சஷிகாந்த் தீட்சித், “ஜமாலுதீன் பித்தப்பையில் கற்களைக் கண்டோம் ஆனால் பித்தப்பை இடது பக்கத்தில் அமைந்திருந்ததால் கற்களை நீக்குவது கடினம். கற்களை அகற்ற 3டி லேபராஸ்கோபிக் இயந்திரங்கள் தேவை” என்று கூறுகிறார்.
ஜமாலுதின் தற்போது சிகிச்சைக்கான நடைமுறையில் உள்ளார்.
அனைத்து உடல் உறுப்புகளும் தவறான பக்கத்தில் இடம்பெற்றிருப்பது இதுவே முதல்முறை. இப்படியான நபர்களுக்கு சிகிச்சை அளிப்பது மிகவும் சிரமம். குறிப்பாக அறுவை சிகிச்சை செய்யும் போது சிரமம் அதிகமென குறிப்பிட்டார்.