Read in English
This Article is From Aug 16, 2020

உத்தர பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்கு மேலும் ஒரு அமைச்சர் உயிரிழப்பு!

சுனில் கவாஸ்கருடன், சேதன் சவுகான் இந்தியாவுக்காக ஒரு வலுவான தொடக்க கூட்டணியை உருவாக்கினார், இருவரும் 3,000 க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்தனர்.

Advertisement
இந்தியா Edited by (with inputs from PTI)

. வெள்ளிக்கிழமை இரவு, அவரது உறுப்புகள் பல செயலிழக்கத் தொடங்கின பின்னர் செயற்கை சுவாச கருவி மூலம் அவருக்கு சிக்ச்சை அளிக்கப்பட்டது.

Highlights

  • சுனில் கவாஸ்கரின் நீண்டகால தொடக்க பங்காளியாக இருந்தார் சேதன் சவுகான்
  • சஞ்சய் காந்தி பிஜிஐ மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக அனுமதிப்பு
  • சிறுநீரக தொடர்பான வியாதிகளால் அவரது உடல்நிலை மோசமடைந்தது
New Delhi:

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் உத்தரபிரதேச அமைச்சரவை மந்திரியுமான சேதன் சவுகான் கொரோனா தொற்று காரணமாக இன்று உயிரிழந்துள்ளார். உத்தரபிரதேச அமைச்சரவையில் உள்துறை காவலர்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றி வந்த இவர் இந்தியாவின் தொடக்கக்கால கிரிக்கெட்டில் 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கிறார். 74 வயதான இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

“எனது மூத்த சகோதரர் ஸ்ரீ சேதன் சவுகான் இன்று எங்களை விட்டு பிரிந்துள்ளார். அவர் குணமடைய பிரார்த்தனை செய்த அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி. அவரது மகன் விநாயக் எப்போது வேண்டுமானாலும் வருவார், பின்னர் நாங்கள் இறுதி சடங்குகளை செய்வோம்.” என அவரது தம்பி புஷ்பேந்திர சவுகான் கூறியுள்ளார்.

புகழ்பெற்ற பேட்ஸ்மேன் சுனில் கவாஸ்கரின் நீண்டகால தொடக்க பங்காளியாக இருந்த சேதன் சவுகான், ஜூலை 12 ஆம் தேதி லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி பிஜிஐ மருத்துவமனையில் கொரோனா வைரஸுக்கு சாதகமான பரிசோதனையை மேற்கொண்ட பின்னர் அனுமதிக்கப்பட்டார்.

Advertisement

சிறுநீரக தொடர்பான வியாதிகளால் அவரது உடல்நிலை மோசமடைந்து, அவர் குர்கானில் உள்ள மெதந்தா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். வெள்ளிக்கிழமை இரவு, அவரது உறுப்புகள் பல செயலிழக்கத் தொடங்கின பின்னர் செயற்கை சுவாச கருவி மூலம் அவருக்கு சிக்ச்சை அளிக்கப்பட்டது.

ஓய்வு பெற்ற பின்னர், சேதன் சவுகான் டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் (டி.டி.சி.ஏ) தலைவர், துணைத் தலைவர், செயலாளர் மற்றும் தலைமைத் தேர்வாளர் என பல்வேறு திறன்களில் பணியாற்றினார்.

Advertisement

உத்தர பிரதேசத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்த இரண்டாவது அமைச்சர் சேதன் சவுகானாவார். முன்னதாக ஆகஸ்ட் 2 ம் தேதி, மாநில தொழில்நுட்ப கல்வி அமைச்சர் கம்லா ராணி வருண்(62), கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்த சில நாட்களில் இறந்தார்.

தனது 12 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில், சேதன் சவுகான் 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 16 அரைசதங்கள் மற்றும் இரண்டு விக்கெட்டுகளுடன் 2,084 ரன்கள் எடுத்தார். அவரால் 97 ரன்களை அடிக்க முடிந்தது. ஆனால், சதம் அடிக்க முடியவில்லை.

Advertisement

சுனில் கவாஸ்கருடன், சேதன் சவுகான் இந்தியாவுக்காக ஒரு வலுவான தொடக்க கூட்டணியை உருவாக்கினார், இருவரும் 3,000 க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்தனர்.

1979 ஆம் ஆண்டில் தி ஓவலில் இங்கிலாந்துக்கு எதிராக சுனில் கவாஸ்கருடன் 213 ரன்கள் எடுத்தது ஒரு தொடக்க வீரராக அவரது வாழ்க்கையின் மறக்கமுடியாத தருணங்களில் ஒன்றாகும், இந்த போட்டியில் அவர் 80 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

(With inputs from PTI)

Advertisement