हिंदी में पढ़ें Read in English
This Article is From Sep 14, 2019

UP Ministers : 40 வருட நடைமுறை முடிவுக்கு வந்தது; அமைச்சர்களும் வரி கட்ட வேண்டும்

1981 ஆம் ஆண்டி பெரும்பாலான அமைச்சர்கள் ஏழை பின்னணியைச் சேர்ந்தவர்கள் என்றும் மிகக் குறைந்த வருமானம் கொண்டவர்கள் என்பதால் இந்த முறை ஏற்படுத்தப்பட்டது.

Advertisement
இந்தியா

Highlights

  • 1981 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின் படி வரி சலுகை கொடுக்கப்பட்டிருந்தது
  • கடந்த ஆண்டு உ.பி அரசு 86 லட்சம் அமைச்சர்களுக்கான வரியை செலுத்தியது
  • இந்த நடைமுறை நேற்று முதல் முடிவுக்கு வந்தது
Lucknow:

உத்தர பிரதேச அமைச்சர்கள் வருமான வரியை செலுத்த தொடங்கியுள்ளதாக உத்தர பிரதேச அரசு வெள்ளிக்கிழமை முடிவு செய்தது. நாற்பது ஆண்டுகளாக  மாநில அரசே வரியினை செலுத்தி வந்தது. அந்த நடைமுறை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. 

1981 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டத்தை ஊடகங்கள் கடுமையான விமர்சித்து வந்தன. 1981 முதல் மாநில முதலமைச்சரும் அமைச்சரும் எந்தவொரு வருமான வரியை செலுத்தவில்லை என்பதை உறுதி செய்கிறது.  ஊடகங்களில் செய்தி வந்த பிறகே அரசியல்வாதிகள் இது குறித்து ஏதும் தெரியாது என்று தெரிவித்தனர். 

 நேற்று மாலை பழைய முந்தைய ஏற்பாடுகள் ரத்து செய்யப்படும் என்றும்  இனி முதல் முதலமைச்சர் மற்றும் அமைச்சர் அனைவரும் வரி செலுத்துவார்கள் என்றும் நிதியமைச்சர் சுரேஷ்குமார் கன்னா அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் உத்தரவின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.  விஸ்வநாத் பிரதாப் சிங் முதலமைச்சராக இருந்த போது இந்த சட்டம் இயற்றப்படது. 

Advertisement

இதுவரை சுமார் 19 முதல்வர்கள் மற்றும் சுமார் 1,000 அமைச்சர்கள் ஆட்சி புரிந்துள்ளனர்.  1981 ஆம் ஆண்டி பெரும்பாலான அமைச்சர்கள் ஏழை பின்னணியைச் சேர்ந்தவர்கள் என்றும் மிகக் குறைந்த வருமானம் கொண்டவர்கள் என்பதால் இந்த முறை  ஏற்படுத்தப்பட்டது.  

ஆனால் பல ஆண்டுகளாக மாநிலத்திற்கு பகுஜன் சமாஜ்வாதி கட்சி தலைவர் மாயாவதி போன்ற தலைவர்கள் தலைமை தாங்கி வருகின்றனர். 2012 மாநிலங்களவை தேர்தலுக்கான வாக்குமூலத்தின் படி ரூ111 கோடி சொத்துக்கள் உள்ளன.

Advertisement

மற்றொரு முன்னாள் முதல் அகிலேஷ் யாதவ் பெயரில் ரூ.37 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. 2017ல் சட்டபேரவைத் தேர்தலுக்காக சமர்பிக்கப்பட்ட வாக்குமூலத்தின் படி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொத்துக்கள் மொத்தம் ரூ. 95,98,053 ஆகும். 

Advertisement