Read in English
This Article is From Oct 29, 2019

சகோதரரின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள குல்தீப் செங்கருக்கு 3 நாள் பரோல் அனுமதி

சகோதரர் மனோஜ் செங்கரின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்கு மட்டுமே இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement
இந்தியா Edited by

தகனம் மதியம் நடக்கும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். (File)

Unnao:

பாலியல் குற்றம் சாட்டப்பட்டு பாஜகவிலிருந்து வெளியேற்றப்பட்ட எம்.எல்.ஏ குல்தீப் செங்கர் மற்றும் அவரது சகோதரர் அதுல் செங்கருக்கும் 72 மணிநேர பரோல் வழங்கப்பட்டுள்ளது. 

சகோதரர் மனோஜ் செங்கரின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்கு மட்டுமே இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருவரும் டெல்லியிருந்து உன்னாவோவுக்கு அழைத்து செல்லப்படுவார்கள். 

தகனம் மதியம் நடக்கும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

குல்தீப் செங்கரின் சகோதரர் மனோஜ் செங்கர் டெல்லியில் வசித்து வந்தார். குல்தீப் மீதான வழக்குகளை அவரே கவனித்துக் கொண்டிருந்தார். பாலியல் பலாத்கார வழக்கில் குல்தீப் செங்கர் சிறையில் அடைக்கப்பட்டார். காவலில் இருந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையை அடித்துக் கொன்றதற்காகவும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 

Advertisement

குல்தீப் செங்கர் பரோலில் வருவது பொருட்டு அவருடைய வீட்டில் போலீஸ் பாதுகாப்பு அதிகரித்துள்ளது. 

Advertisement