Read in English
This Article is From Jul 22, 2020

உ.பியில் நடப்பது ராம ராஜ்ஜியம் அல்ல குண்டர்கள் ராஜ்ஜியம்: ராகுல் கடும் விமர்சனம்

ராகுல் காந்தி உயிரிழந்த காசியாபாத்தை சேர்ந்த பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷிக்கு, இரங்கலும் தெரிவித்துள்ளார். 

Advertisement
இந்தியா

உ.பியில் நடப்பது ராம ராஜ்ஜியம் அல்ல குண்டர்கள் ராஜ்ஜியம்: ராகுல் கடும் விமர்சனம்

New Delhi:

உத்தர பிரதேசத்தில் ராம ராஜ்ஜியம் அளிப்பதாக உறுதியளித்துவிட்ட, குண்டர்கள் ராஜ்ஜியத்தை அளித்து வருகின்றனர் என பத்திரிகையாளர் கொலை தொடர்பாக பாஜக அரசை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். 

மேலும், ராகுல் காந்தி உயிரிழந்த காசியாபாத்தை சேர்ந்த பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷிக்கு, இரங்கலும் தெரிவித்துள்ளார். 

உத்தர பிரதேசத்தினை சேர்ந்த விக்ரம் ஜோஷி எனும் பத்திரிகையாளர் திங்கட்கிழமை இரவு தனது இரு மகள்களுடன் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத சில நபர்களால் தாக்கப்பட்டு கீழே தள்ளப்பட்டார். பைக்கிலிருந்து கீழே விழுந்தவுடன் அவரின் இரு மகள்களும் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய நிலையில், ஜோஷியை அந்த கும்பல் துப்பாக்கியால் சுட்டுள்ளது. 

இதைத்தொடர்ந்து, படுகாயமடைந்த ஜோஷி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

Advertisement

இதனிடையே, கடந்த ஜூலை 16ம் தேதியன்று விக்ரம் ஜோஷி தனது மருமகளை சிலர் துன்புறுத்தியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, தனது மருமகளுக்கு நடந்த துன்புறுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி கொல்லப்பட்டுள்ளார். துயரமடைந்த அந்த குடும்பத்திற்கு எனது ஆறுதல்களை தெரிவித்துக்கொள்கிறேன். உத்தர பிரதேசத்தில் ராம ராஜ்ஜியம் அளிப்பதாக உறுதியளித்துவிட்ட, குண்டர்கள் ராஜ்ஜியத்தை அளித்து வருகின்றனர் என்று அவர் விமர்சித்துள்ளார். 

Advertisement

காங்கிரஸ் தலைவர் அகமது படேல் பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியளிப்பதாகவும், உத்தரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் இல்லை என்பதற்கு மற்றொரு எடுத்துக்காட்டு என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த ஆறு ஆண்டுகளாக ஊடகங்கள் எவ்வாறு கட்டமைப்பாக மிரட்டப்பட்டு வருகின்றன என்பதற்கான கடும் நினைவூட்டல் இது" என்று அவர் ட்விட்டர் பதிவில் குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisement

மேலும், ஜோஷியின் குடும்பத்திற்கு எங்களது இரங்கல், நாங்கள் துணிச்சலான பத்திரிக்கைகளுக்கு துணையாக நிற்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement