பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக காவல்துறையினர் அழைத்து சென்று பின்னர் கைது செய்யதனர்
Shahjahanpur, Uttar Pradesh: சின்மயானந்த் மீது பாலியல் பலாத்கார குற்றம் சாட்டிய உ.பி மாணவி மீது வீடியோவை வெளியிடுவதாக கூறி மிரட்டி பணம் பறிக்க முயற்சித்தாக கொடுக்கப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை அப்பெண்ணின் வீட்டிலிருந்து காவல்துறையினர் பலவந்தமாக இழுத்துசென்றதாகவும் காலணி கூட அணிய அனுமதிக்கவில்லை என்று குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
காவல்துறையினர் பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து சென்று பின்னர் கைது செய்தனர். அப்பெண் குற்றம் சாட்டிய 72 வயதான சின்மயானந்த் கைது செய்யப்பட்டதிலிருந்து மருந்துவமனையில் உள்ளார்.
நேற்று நீதிமன்றம் மாணவியின் கோரிக்கையை விசாரிக்க ஒப்புக் கொண்டது. 23 வயதான பெண், உ.பியின் ஷாஜகான்பூரில் உள்ள நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் உ.பி காவல்துறையின் குழு வியத்தகு முறையில் கட்டாயப்படுத்தி அப்பெண்ணை வாகனத்திலே உட்கார வைத்தது என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தனக்கு நீதிமன்ற விசாரணை இருப்பதாக கூறி காவல்துறையினருடன் செல்ல மறுத்து விட்டாள். அங்கு குழப்பம் நிலவியதும் ஊடகங்கள் வந்து கேள்வி எழுப்பவும் காவல்துறையினர் அந்தப் பெண்ணை நீதிமன்றத்திற்கு செல்ல அனுமதித்தனர்.
சின்மயானந்தின் வழக்கறிஞர் ஓம் சிங், “அப்பெண் பேஸ்புக்கில் பதிவேற்றிய வீடியோ பணப்பறிப்பு வழக்குடன் தொடர்பில் உள்ளது. அவள் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று எனக்கு புரியவில்லை. அப்பெண் சிறைக்கு செல்வாள் நான் உறுதியாக நம்புகிறேன்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.