உத்தரபிரதேச மாநிலத்தில் மணிப்பூரியில் மரத்தில் தூக்கில் தொங்கியபடி இருந்த உடல் கண்டெடுக்கப்பட்டது..
Mainpuri: மணிப்பூரி: உத்தரபிரதேசத்தின், மணிப்பூரில் 15 வயது சிறுமியை அடித்து கொலை செய்து தூக்கிலிட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமியின் கொலை குறித்து பெற்றோர் கொடுத்த புகாரில், பள்ளியில் நடைபெற்ற காந்தி ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பிய போது, 4 பேர் கொண்ட கும்பல் சிறுமியை வழிமறித்துள்ளது. பாலியில் ரீதியாக தொந்தரவு செய்து கொலை செய்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால், பிரேத பரிசோதனையில் சிறுமியின் அந்தரங்க பகுதிகளில் எந்த விதமான காயங்களும் இல்லையென்று தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பக்கத்து கிராமத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தப்பியோடிய மற்றொரு இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.