This Article is From Jun 27, 2018

18 லட்சம் பெண்கள் வேலை இழக்கும் அபாயம்!- சிக்கலாகும் மத்திய அரசின் அறிவிப்பு

பணிபுரியும் பெண்களுக்கான மகப்பேறு விடுமுறைக்கான காலத்தை நீட்டித்து மாற்றி அமைத்த அரசின் திட்டம் தற்போது எதிர்வினையாற்றி உள்ளதாக ஒரு ஆய்வு கூறுகிறது. 

18 லட்சம் பெண்கள் வேலை இழக்கும் அபாயம்!- சிக்கலாகும் மத்திய அரசின் அறிவிப்பு

ஹைலைட்ஸ்

  • மகப்பேறு விடுமுறை காலத்தை மோடி தலைமையிலான அரசு மாற்றியமைத்தது
  • இதன் மூலம் பெண்கள் பயனடைவர் என எதிர்பார்க்கப்பட்டது
  • ஆனால், ஆய்வு முடிவுகள் திடுக்கிடும் தகவல்களை கூறுகின்றன

பணிபுரியும் பெண்களுக்கான மகப்பேறு விடுமுறைக்கான காலத்தை நீட்டித்து மாற்றி அமைத்த மத்திய அரசின் திட்டம் தற்போது எதிர்வினையாற்றி உள்ளதாக ஒரு ஆய்வு கூறுகிறது.

வேலை செய்யும் பெண்களுக்கான கூடுதல் வசதிக்காக மகப்பேறு விடுமுறைக்காலம் கொள்கையில் வரவேற்கத்தக்க திட்டத்தை கனடா மற்றும் நார்வேக்குப் பின்னர் இந்தியா அறிமுகப்படுத்தியது. ஆனால், இத்திட்டத்தால் தற்போது நல்ல பணியில் இருக்கும் பெண்கள் வேலை இழக்கும் அபாயமும் சிறு மற்றும் குறு நிறுவனங்கள் பெண்களை வேலைக்கு அமர்த்துவதே கேள்விக்குறியாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

மகப்பேறு விடுப்பு குறித்தான புதிய சட்டப்படி, 12 வார பெய்டு- விடுமுறைக்கு பதிலாக 26 வாரங்களாக பெய்டு- விடுமுறை அதிகரிக்கப்பட்டுள்ளது.

2018- 19 நிதியாண்டில் சர்வே ஆய்வின் அடிப்படையில் 1.1 மில்லியன் முதல் 1.8 மில்லியன் வரையிலான பெண்கள் சுமார் 10-க்கும் மேற்பட்ட துறைகளில் வேலை இழப்பர் எனக் கூறப்பட்டுள்ளது. இது வெறும் கணிப்பு தான் என்றும் உண்மை நிலவரத்தை ஆராய்ந்தால் அத்தனை துறைகளிலும் சுமார் 10 முதல் 12 மில்லியன் பெண்கள் நாடு முழுவதும் வேலை இழப்பர் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஒட்டுமொத்த வேலைப்பளுவில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் பெண்களின் பங்கு என்பது 36 சதவிகிதமாக இருந்தது. ஆனால், கடந்த 2016-ம் ஆண்டோ இந்த நிலை வெறும் 24 சதவிகிதமாக வீழ்ந்தது. மெக்கென்சி நிறுவனத்தின் கணிப்பில் பெண்கள் அதிகளவில் பணியாற்றினால் நாட்டின் மொத்த உள்வருமானம் என்பது வருகிற 2025-ம் ஆண்டு 700 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டும் எனத் தெரிவிக்கிறது.

இதுதொடர்பான சர்வே நாட்டில் உள்ள முக்கியமான அத்தனைத் துறைகளிலும் 300 பணிபுரியும் பெண்களிடம் எடுக்கப்பட்டது. விமானப் போக்குவரத்துத் துறை, ரியல் எஸ்டேட், தொழில்நுட்பத்துறை, வருமான வரித்துறை, வணிகம், கல்வி, உற்பத்தி, வங்கி சேவை, சுற்றுலா என நாட்டின் மிகப்பெரும் வருமானம் ஈட்டித்தரும் அத்தனைத் துறைகளிலும் உள்ள பெண்களிடம் இந்த சர்வே எடுக்கப்பட்டுத் தான் மேற்கண்ட கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பெரு நிறுவனங்களை விட சிறு மற்றும் குறு நிறுவனங்கள் இனி வரும் காலங்களில் பொருளாதார நிலையை சீராக வைத்துக்கொள்ள பெண்களை வேலைக்குத் தேர்வு செய்வதையே தவிர்த்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.



(हेडलाइन के अलावा, इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है, यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)

.