This Article is From Oct 23, 2018

14 லட்சம் புதிய பயனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்க உ.பி அரசு முடிவு!

விதவைகள், விவசாயிகள், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தேவையான நெறிமுறைகளை அடைந்தவர்கள், ஆனால் இந்த திட்டங்களின் கீழ் வராதவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நலன்களை நீட்டித்து வழங்க அரசு முடிவு

14 லட்சம் புதிய பயனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்க உ.பி அரசு முடிவு!

அரசின் இந்த முடிவால், 14 லட்சம் புதிய பயனாளிகள் ஓய்வூதியம் பெறுவர்.

Lucknow:

உத்தரபிரதேசத்தில் 14 லட்சம் புதிய பயனாளிகள், அதாவது தேவையான நெறிமுறைகளை அடைந்தவர்கள், ஆனால் இந்த திட்டங்களின் கீழ் வராதவர்களுக்கு ஓய்வூதியத்தை நீட்டித்து வழங்க அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து லக்னோவில் அரசு செய்தி தொடர்பாளர் கூறியதாவது, விதவைகள், விவசாயிகள், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தேவையான நெறிமுறைகளை அடைந்தவர்கள், ஆனால் இந்த திட்டங்களின் கீழ் வராதவர்கள் உள்ளிட்டவர்களுக்கு ஓய்வூதிய நலன்களை நீட்டித்து வழங்க முதலமைச்சர் முடிவு செய்துள்ளார். இந்த முடிவால், 14.21 லட்சம் புதிய பயானிகள் ஓய்வூதிய பலன்களை பெறுவர் என அவர் கூறியுள்ளளார். 

பல்வேறு மாவட்டங்களில் முதலமைச்சர் ஆய்வுக்கு சென்றபோது, குறிப்பிட்ட மக்கள் தேவையான நெறிமுறைகளை அடைந்தவர்கள், ஆனால் இந்த திட்டங்களின் கீழ் வராதவர்கள் ஓய்வூதிய பலன்களில் இருந்து விடுப்பட்டதாகவும்,  முதல்வரிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, அத்தகைய நபர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களது பெயர்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர் இந்த ஓய்வூதிய திட்டத்தின் கீழ் சேர்க்கப்படுவார்கள். 

மாவட்ட வாரியான கணக்கெடுப்புகளில், 3.96 லட்சம் விதவைகள் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தற்போது ஓய்வூதிய திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர். இதேபோல், 9.04 லட்சம் விவசாயிகள் மற்றும் வயதானவர்கள் கண்டறியப்பட்டு ஓய்வூதிய பலன்களுக்கு கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

.