யோத்தியில் ராமர் கோயில் கட்ட வசீம் ரிஸ்வி ஆதரவு தெரிவித்துள்ளார்.
Lucknow: அயோத்தியில் ராமர் கோயில் கட்ட உத்தர பிரதேச ஷியா மத்திய வக்ஃப் வாரியத் தலைவர் வசீம் ரூ.51,000 நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளார்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயில் கட்ட உச்சநீதிமன்றம் கடந்த வாரம் அனுமதி வழங்கியது. தொடர்ந்து, இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலத்தையும் வழங்கும் படியும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு 'சிறந்த தீர்ப்பு' என ஷியா மத்திய வக்ஃப் வாரியத் தலைவர் வசீம் ரிஸ்வி தெரிவித்துள்ளார்.
மேலும், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக, வசீம் ரிஸ்வி ஃபிலிம்ஸ் சார்பில் ரூ.51,000 ஆயிரம் நன்கொடையாக வழங்குவதாக அறிவித்த அவர், ராமர் கோயில் கட்டுமான பணிகளுக்கு ஷியா மத்திய வக்ஃப் வாரியம் உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. பல ஆண்டுகளாக நிலவி வந்த அயோத்திப் பிரச்னைக்கு உச்ச நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்தது.
அந்த உத்தரவில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் கோயில் கட்ட அனுமதி அளிக்கப்பட்டதோடு, அயோத்தியில் இஸ்லாமியர்கள் விரும்பும் இடத்தில் மத்திய, உத்தரப் பிரதேச மாநில அரசுகள் 5 ஏக்கர் இடத்தை வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன் கோயில் கட்டுவதற்கான அமைப்பை 3 மாதத்திற்குள் ஏற்படுத்த வேண்டும் என்றும், நிலத்தை மத்திய அரசே நிர்வகிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.