Ballia, Uttar Pradesh:
பல்லியா, உத்திரப் பிரதேசம்: மற்ற அனைத்து திரும
ணங்களைப் போலவே உத்திரப் பிரதேச மாநிலம் பல்லியாவில் நடந்த திருமணமும் தொடங்க்கியது. ஆனால், நிகழ்வில் கலந்து கொண்ட விருந்தினர்கள் பின்னர் உணவருந்த செல்கையில் எதிர்பாராத சம்பவங்கள் அரங்கேறின கல்யாணம் கலவரமானது.இந்த திருமண விழாவில் தட்டு காலியானதையடுத்து ஏற்பட்ட தகராறில், 20 வயது இளைஞர் அடித்து கொல்லப்பட்டார். நான்கு பேர் படுகாயம் அடைந்தனர், என காவல் அதிகாரிகளை மேற்கோள் காட்டி பிடிஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
மணியார் காவல் நிலைய அதிகாரி நன்ஹூ யாதவ் கூறுகையில் "நேற்றிரவு விழாவில் கலந்து கொண்ட விருந்தினர்களுக்கு சில பலகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. சில மணி நேரங்களுக்குப் பிறகு விழா ஒருங்கினைப்பாளர்களிடத்தில், விருந்தினர்களுக்கு உணவு வழங்க வைத்திருந்த தட்டு காலியானதால், வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின் வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டது." என்கிறார்.
ஐந்து பேர் இந்த சண்டையினால் பாதிக்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர், என்று யாதவ் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்
விருந்தினர்களில் ஒருவரான விஷால் (20), மருத்துவமனைக்கு கொண்டு செல்கிற வழியிலே இறந்துவிட்டதாக அதிகாரி தெரிவித்தார்.
மேலும் இந்த சம்பவத்தைப் பற்றி விசாரணை செய்து வருவதாகவும் யாதவ் கூறினார்.