This Article is From Sep 12, 2019

கணவருடன் போனில் பேசிய படியே பாம்புகளின் மீது அமர்ந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

செல்போனில் பேசிக் கொண்டே கீதா தனது அறைக்குள் சென்றுள்ளார், அங்கு பாம்புகள் இருந்ததை கவனிக்காத அவர் கட்டிலில் அமர்ந்ததும், பாம்புகள் அவரைக் கடித்துள்ளன. இதையடுத்த சில நிமிடங்களிலே அவர் மயக்கமடைந்துள்ளார்.

Advertisement
இந்தியா Edited by

அந்த பெண் பாம்புகள் மீது அமர்ந்த போது, அவை இனச்சேர்க்கையில் இருந்ததாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

Gorakhpur:

உத்தர பிரதேசத்தில் பெண் ஒருவர் போனில் பேசிய படியே ஒரு ஜோடி பாம்புகள் மீது அமர்ந்ததால், அந்த பெண்ணை பாம்புகள் கடித்துள்ளன. இதில் பாம்பு கடித்த சில நமிடங்களிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

உத்தர பிரதேசத்தின் ரியான்வ் கிராமத்தில் வசித்து வருபவர் கீதா. இவரது கணவர் ஜெய் சிங் யாதவ் தாய்லாந்தில் பணிபுரிந்து வருகிறார். சம்பவம் நடந்த அன்று, கீதா தனது கணவருடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்துள்ளார். 

போனில் பேசிய படியே தனது அறைக்குள் சென்ற கீதா, அங்கு கட்டிலில் ஒரு ஜோடி பாம்பு இருந்ததை கவனிக்காமல் அதன் மீது அமர்ந்துள்ளார். 

இதனால் அந்த பாம்புகள் கீதாவை கடித்துள்ளன. இதையடுத்த சில நிமிடங்களிலே அவர் மயக்கமடைந்துள்ளார். இதனிடையே, கீதாவின் அலறல் சத்தம் கேட்டு அறைக்குள் வந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கட்டிலில் இருந்த பாம்புகளை அடித்துக்கொன்றனர். 

Advertisement

தொடர்ந்து, அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கீதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இந்த சம்பவம் குறித்து, கால்நடை நிபுணர்கள் கூறுகையில், அந்தப் பெண் கட்டிலில் இருந்த பாம்புகள் மீது அமர்ந்தபோது அவை இனச்சேர்க்கையில் இருந்துள்ளன என்று தெரிவித்துள்ளனர்.
 

Advertisement
Advertisement