This Article is From Oct 10, 2019

நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் தேர்வு முடிவுகளை மாற்றி உத்தரப்பிரதேச அரசு!!

4 லட்சத்திற்கும் அதிகமானோர் உத்தரப்பிரதேச சிவில் சர்வீஸ் (UPPSC) தேர்வை எழுதியுள்ளனர். கடந்த 2018-ல் எழுதப்பட்ட தேர்வு முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.

நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் தேர்வு முடிவுகளை மாற்றி உத்தரப்பிரதேச அரசு!!

நீதிமன்ற தலையீட்டின்பேரில் முடிவுகள் மாற்றப்பட்டுள்ளது.

New Delhi:

அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, உத்தரப்பிரதேச சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி 160-க்கும் அதிகமான பெண்கள் முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 

உத்தரப்பிரதேசத்தில் அரசுப் பணிகளுக்கான முதல் நிலைத் தேர்வு கடந்த 2018 அக்டோபரில் நடத்தப்பட்டன. 6.35 லட்சம் பேர் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், தேர்வை 3.98 லட்சம்பேர் எழுதினார்கள். 

இதன் முடிவுகள் கடந்த மார்ச் மாதத்தின்போது வெளியிடப்பட்டன. இதன்படி தேர்வில் தேர்ச்சி பெறுவதற்குரிய மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், அவர்கள் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்பது விதியாக இருந்தது. இதனால், ஏராளமானோர் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறும் வாய்ப்பை தவறினர்.

இதனை எதிர்த்து குஷ்பூ பன்சால் என்பவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதனை ஏற்ற நீதிமன்றம் வழக்குத் தொடர்ந்தவர்களுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியது. தீர்ப்பின்படி, உதவி வனத்துறை அலுவலர் பதவிகளுக்கு இருந்த விதிகள் மாற்றப்பட்டன.

இந்த விதி மாற்றப்பட்ட காரணத்தால், 160-க்கும் அதிகமான பெண்கள், முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். இவர்கள் Main Exam எனப்படும் முதன்மைத் தேர்வை எழுத வேண்டும். அதற்கான ஆவணங்களை நாளைக்குள் அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 

.