ஒருங்கிணைந்த மருத்து பணிகளுக்கான தேர்வு அக்டோபர் 22-ம்தேதி நடைபெறும். இதற்கான அறிவிக்கை ஜூலை 22ம் தேதி வெளியாகும்.
ஹைலைட்ஸ்
- கொரோனா பாதிப்பு காரணமாக சிவில் சர்வீசஸ் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன
- புதிய தேதிகளை யு.பி.எஸ்.சி தற்போது வெளியிட்டுள்ளது
- முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கட்டுப்பாடுகளுடன் தேர்வு நடைபெறும்
New Delhi: கொரோனா பாதிப்பு காரணமாக சிவில் சர்வீசஸ் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், தேர்வு நடைபெறும் தேதியை மத்திய பணியாளர் தேர்வு வாரியமான யு.பி.எஸ்.சி. இன்று அறிவித்துள்ளது.
இதன்படி, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட் சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கான முதல் நிலைத் தேர்வு (Preliminary Exam) அக்டோபர் மாதம் 4-ம் தேதி நடைபெறும்.
இந்திய வனத்துறை பணிக்கான முதல் நிலைத் தேர்வும், சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வுடன் நடத்தப்படும். இந்திய வனத்துறை பணிக்கான முதன்மை தேர்வு (Main exam) பிப்ரவரி 28, 2021-ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் யு.பி.எஸ்.சி., சிவில் சர்வீசஸ் முதல் நிலைத் தேர்வுக்கான ஹால்டிக்கெட், தேர்வு நடைபெறும் இடம் உள்ளிட்ட விவரங்களை வெளியிடும்.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கொரோனாவையொட்டி, புதிய விதிகளை யு.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. இதன்படி தேர்வர்கள் தேர்வு அறைக்கு கட்டாயம் மாஸ்க் அணிந்தே வர வேண்டும்.
இதேபோன்று இந்திய பொருளாதர பணிக்கான முதன்மை தேர்வு அக்டோபர் 16-ம்தேதியும், என்.டி.ஏ., தேர்வு செப்டம்பர் 6-ம்தேதியும் நடைபெறவுள்ளது.
ஒருங்கிணைந்த மருத்து பணிகளுக்கான தேர்வு அக்டோபர் 22-ம்தேதி நடைபெறும். இதற்கான அறிவிக்கை ஜூலை 22ம் தேதி வெளியாகும்.
மத்திய போலீஸ் படைப் பணிக்கான தேர்வு டிசம்பர் 20-ம்தேதி நடைபெறுகிறது. இதுதொடர்பான அறிவிக்கை ஆகஸ்ட் 18ம் தேதி வெளியாகும்.