சுமார் 10 லட்சம் பேர் இந்த தேர்வுக்காக பதிவு செய்துள்ளனர்.
New Delhi: நாடு முழுவதும் 72 மையங்களில் யு.பி.எஸ்.சி. முதல் நிலைத் தேர்வு நாளை நடைபெறுகிறது. இதற்காக சுமார் 10 லட்சம்பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிகளுக்கான தேர்வை மத்திய பொது தேர்வாணையமான யு.பி.எஸ்.சி. நடத்துகிறது. இதன் முதல் நிலைத் தேர்வு நாளை தொடங்குகிறது. இதில் சுமார் 10 லட்சம்பேர் எழுதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது
கட் ஆஃப் முறையில் இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் அடுத்த கட்டமாக எழுத்து தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு அடுத்த கட்டமாக நேர்முகத் தேர்வு இருக்கும். இந்த நேர்முகத் தேர்வு மட்டும் டெல்லியில் நடைபெறும்.
மற்ற தேர்வுகள் அனைத்தும், தேர்வர்கள் விருப்பப்படும் இடங்களில் எழுதிக் கொள்ளலாம். முன்னதாக கடந்த ஏப்ரல் 30-ம்தேதி ஹால் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டன.
நாளை நடைபெறும் தேர்வுக்கு தேர்வர்கள் தங்களது ஒரிஜினல் அடையாள அட்டை, ஹால் டிக்கெட் உள்ளிட்டவற்றை எடுத்து வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.