2019 சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகளை வெளியிட்டது யூபிஎஸ்சி!
New Delhi: 2019 சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகளை யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) அறிவித்துள்ளது. இதில், பிரதீப் சிங் என்பவர் முதலிடம் பிடித்துள்ளார். பெண் தேர்வர்களில் பிரதிபா வர்மா என்பவர் முதலிடம் வகித்துள்ளார்.
2019 சிவில் சர்வீசஸ் தேர்வு மூலம் பல்வேறு அதிகாரிகள் பணியிடங்களுக்கு மொத்தம் 829 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
Check Civil Services Exam Result
யூபிஎஸ்சி தேர்வு இறுதி முடிவுகள் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சிவில் சர்வீசஸ் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் நேர்காணல் நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்களின் இறுதி முடிவுகளே இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பினருக்கான ஒதுக்கீடு முதன்முறையாக இந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீடு மூலம் 78 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதில், 11 தேர்வர்களின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசு துறைகளில் உள்ள ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பணியிடங்களுக்கான தேர்வுகளை யூபிஎஸ்சி ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
இந்த 2020ம் ஆண்டுக்கான யூபிஎஸ்சி தேர்வு மே.31ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. எனினும், கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக அந்த தேர்வு தேதிகள் அக்.4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Click here for more Jobs News