Read in English
This Article is From Oct 21, 2019

Civil Services Exam:ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு குறித்த அறிவிப்பு பிப்ரவரியில் வெளியாகிறது!

நடந்து முடிந்த 2019 சிவில் சர்வீசஸ் தேர்வுக்காக 10 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 3 நிலைகளாக சிவில் சர்வீசஸ் தேர்வு நடத்தபப்ட்டு வருகிறது.

Advertisement
இந்தியா Edited by

மே மாதம் முதல் நிலைத் தேர்வு நடைபெறுகிறது.

New Delhi:

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு என பரவலாக அழைக்கப்படும் சிவில் சர்வீசஸ் தேர்வு குறித்த அறிவிப்பு பிப்ரவரி மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மொத்தம் 3 நிலைகளாக சிவில் சர்வீசஸ் தேர்வு நடத்தப்படுகிறது. முதல் நிலைத் தேர்வில் விண்ணப்பித்த தகுதியுள்ளவர்கள் தேர்வு எழுதுவார்கள். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் அடுத்த கட்டமான பிரதான தேர்வுக்கு தகுதி பெறுவார்கள். அதிலும் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். 

பிரதான தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். இதன்படி, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., வெளியுறவுத்துறை பணி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பணிகள் தேர்வர்களுக்கு ஒதுக்கப்படும்.

2020-ம் ஆண்டுக்கான சிவல் சர்வீசஸ் தேர்வு குறித்த அறிவிப்பு பிப்ரவரி மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் முதல்நிலைத் தேர்வு எழுத விண்ணப்பிக்கின்றனர். இருப்பினும், விண்ணப்பிப்போரில் பாதிப்பேர் மட்டுமே தேர்வை எழுதும் வழக்கமாக கொண்டிருக்கின்றனர். 

Advertisement

முதல்நிலைத் தேர்வுக்கு பின்னர், 4 பொதுத்தாள்கள் தாள் ஒன்றுக்கு 250 மதிப்பெண்களாக 1000 மதிப்பெண்களும், விருப்ப பாடம் 2 தாள்கள் 500 மதிப்பெண்களும், கட்டுரை 250 மதிப்பெண் என மொத்தம் 1,750 மதிப்பெண்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தபப்படுகிறது. இதனை Main Exam அல்லது பிரதான தேர்வு என்று அழைப்பார்கள். 

இதன்பின்னர் நேர்முகத்தேர்வு எனப்படும் Personality Test தேர்வு டெல்லியில் உள்ள யு.பி.எஸ்.சி அலுவலகத்தில் நடத்தப்படும். 

Advertisement

Advertisement