This Article is From Dec 22, 2018

மெய்ன் தேர்வர்களுக்கு பணி முன்னுரிமை தேர்வை ஒத்தி வைத்தது யு.பி.எஸ்.சி.

மெய்ன் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தங்கள் பணி முன்னுரிமையை ஜனவரி 8 முதல் 21-ம் தேதிவரை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெய்ன் தேர்வர்களுக்கு பணி முன்னுரிமை தேர்வை ஒத்தி வைத்தது யு.பி.எஸ்.சி.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுகளை யுபிஎஸ்சி நடத்தி வருகிறது.

New Delhi:

சிவில் சர்வீஸ் மெய்ன் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பணி முன்னுரிமை தேர்வு செய்யும் தேதியை யு.பி.எஸ்.சி. ஒத்தி வைத்துள்ளது.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீஸ்களுக்கான தேர்வை மத்திய பணியாளர் தேர்வு வாரியம் எனப்படும் யு.பி.எஸ்.சி நடத்தி வருகிறது. இந்த தேர்வுகள் ப்ரிலிமினரி, மெய்ன் மற்றும் பர்சனாலிட்டி டெஸ்ட் என 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது.

ப்ரிலிமினரி கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்டது. அதில் தேர்வானவர்களுக்கு மெய்ன் தேர்வு கடந்த அக்டோபரில் நடத்தப்பட்டது. இதிலும் தேர்வானவர்களுக்கு அடுத்த ஆண்டில் பர்சனாலிட்டி டெஸ்ட் எனப்படும் நேர்முகத் தேர்வு நடத்தப்பவுள்ளது.

இதற்கு முன்பாக மெய்ன் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தாங்கள் எந்த மாநிலத்தில், எந்த பணியில் பணியாற்ற விரும்புகிறார்கள் என்பதை யுபிஎஸ்சிக்கு தெரிவிக்க வேண்டும். அந்த முன்னுரிமை தேர்வை முன்பு டிசம்பர் 21-ஜனவரி 3 வரை தெரிவிக்கலாம் என்று அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

தற்போது அதனை ஒத்தி வைத்து வரும் ஜனவரி 8 முதல் ஜனவரி 21-ம் தேதி வரை தெரிவிக்கலாம் என யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது.

 

.