This Article is From May 04, 2020

கொரோனா அச்சுறுத்தலால் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., சிவில் சர்வீசஸ் தேர்வுகள் ஒத்தி வைப்பு!!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வராத நிலையில் ஊரடங்கு உத்தரவு மே 17-ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு நடந்த சிவில் சர்வீசஸ் தேர்வின் நேர்முகத்தேர்வை யு.பி.எஸ்.சி. ஒத்தி வைத்தது.

Advertisement
இந்தியா Edited by

மாற்று தேதி குறித்த விவரங்கள் மே 20-ம்தேதி வெளியிடப்படும்

New Delhi:

கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீஸ்களுக்கான முதல் நிலைத்தேர்வு (Preliminary Exam) ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மே 31-ம்தேதி முதல் நிலைத் தேர்வு நடைபெறும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா பரவலால் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

மாற்று தேதி குறித்த விவரங்கள் மே 20-ம்தேதி வெளியிடப்படும் என்று தேர்வை நடத்தும் மத்திய பணியாளர் தேர்வு வாரியமான யு.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது. 

குறைந்தது ஒரு மாதத்திற்கு முன்பாக தேர்வு தேதி அறிவிக்கப்படும் என்று சிவில் சர்வீசஸ் தேர்வு ஆர்வலர்களுக்கு யு.பி.எஸ்.சி. உறுதி அளித்திருக்கிறது. 

Advertisement

இதேபோன்று இந்திய வனத்துறை தேர்வையும் (Indian Forest Service Exam) யு.பி.எஸ்.சி. ஒத்தி வைத்துள்ளது. இந்த தேர்வும் மே 31-ம்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மாற்றுத் தேதி குறித்த விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வராத நிலையில் ஊரடங்கு உத்தரவு மே 17-ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு நடந்த சிவில் சர்வீசஸ் தேர்வின் நேர்முகத்தேர்வை யு.பி.எஸ்.சி. ஒத்தி வைத்தது. 

Advertisement

வழக்கமாக நேர்முக தேர்வு ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் தொடங்கி ஏப்ரல் மாதத்தில் முடிந்து விடும். ஆனால் நடப்பாண்டில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பால் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இதேபோன்று Indian Economic Service/Indian Statistical Service, Combined Medical Services Examination உள்ளிட்ட தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. 

Advertisement

Advertisement