Read in English
This Article is From Apr 05, 2019

ஐ.ஏ.எஸ். தேர்வு முடிவுகள் வெளியீடு! மும்பை ஐ.ஐ.டி. பட்டதாரி கனிஷக் கடாரியா முதலிடம்!!

சிவில் சர்வீஸ் பணிகளுக்கு 577 ஆண்கள் 182 பெண்கள் என மொத்தம் 759 பேர் பரிந்துரை செய்யப்படுகின்றனர்.

Advertisement
இந்தியா Edited by

தேர்வான முதல் 25 பேரில் 15 பேர் ஆண்கள், 10 பேர் பெண்கள்.

New Delhi:

ஐ.ஏ.எஸ். தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் மும்பை ஐ.ஐ.டி. பட்டதாரி கனிஷக் கடாரியா முதலிடம் பிடித்துள்ளார். எஸ்.சி. வகுப்பை சேர்ந்த கடாரியா, கணிதத்தை தனது விருப்ப பாடமாக தேர்வு செய்திருந்தார். 

ஷ்ருதி ஜெயந்த் தேஷ்முக் என்பவர் பெண்களில் முதலிடம் பிடித்துள்ளார். ஒட்டு மொத்த அளவில் அவர் 5-ம் இடம் வகிக்கிறார். அவர் கெமிக்கல் எஞ்சினியரிங் படிப்பை போபாலில் முடித்திருக்கிறார். 

தேர்வான முதல் 25 பேரில் ஆண்கள் 15 பேர். பெண்கள் 10 பேர் ஆவர். மொத்தம் 759 பேர் சிவில் சர்வீஸ் பணிகளுக்கு இந்த தேர்வு மூலமாக பரிந்துரைக்கப்படுகின்றனர். அவர்களில் 577 பேர் ஆண்கள். 182 பேர் பெண்கள் ஆவர். 

வெற்றி பெற்ற முதல் 25 பேரில் பெரும்பாலானவர்கள் பொறியியல், பொருளாதாரம், சட்டம், வரலாறு படித்தவர்களாக உள்ளனர். கடந்த ஆண்டு ஜூன் மாதத்தின்போது நாடு முழுவதும் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட்டது. 

Advertisement

இதனை எழுத 10 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 5 லட்சம் பேர் மட்டுமே தேர்வு எழுதினர். அவர்களில் 10,468 பேர் அடுத்த நிலைக்கு சென்றனர். நேர்முகத் தேர்வுக்கு 1994 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் காலியிடங்களான 759 இடங்களுக்கு மட்டும் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

Advertisement