This Article is From Nov 16, 2018

பேஸ்புக்கை தாக்கிய டிம் குக், கோபமடைந்த மார்க் சக்கர்பெர்க்!

ஊழியர்களிடம் ஐபோன்கள் பயன்படுத்துவதை தவிர்த்து விட்டு ஆண்ட்ராய்டு போன்களை பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.

பேஸ்புக்கை தாக்கிய டிம் குக், கோபமடைந்த மார்க் சக்கர்பெர்க்!

பொது மக்களின் தனிப்பட்ட தகவல்களை பேஸ்புக் போன்று ஆப்பிள் திருடுவதில்லை என்று கூறினார்.

California:

 

ஆப்பிள் சிஇஓ டிம் குக் பேஸ்புக் குறித்து கருத்து தெரிவிக்கும் முன் எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும். அவருடைய கருத்தினால் கோபமடைந்த மார்க் சக்கர்பெர்க் தனது ஊழியர்களிடம் இனி ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளை பயன்படுத்த வேண்டாமென்று உத்தரவிட்டுள்ளார். ஐபோன்களுக்கு பதிலாக ஆண்ட்ராய்டு போன்களை பயன்படுத்துமாறு கூறியுள்ளார். 

எம்.எஸ்.என்.பி.சி-க்கு டிம் குக் அளித்த பேட்டியில், ஆப்பிள் தனிப்பட்ட தகவல்களை எப்போதும் திருடாது. அந்தரங்கம் மனித உரிமை என அவர் கருத்து தெரிவித்துள்ளார். இந்த வருடத்தின் தொடக்கத்தில்,  கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா முறைகேட்டில் பேஸ்புக் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

.