This Article is From May 31, 2019

தேர்தல் படுதோல்வி: கூட்டணி சிறப்பாக செயல்படும் என ராகுலிடம் குமாரசாமி உறுதி!

பிரதமர் நரேந்திர மோடியின் பிரமாண்ட பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்பாக, ராகுல் காந்தியை சந்தித்து பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம் என குமாரசாமி வலியுறுத்தியுள்ளார்.

ராகுலின் ராஜினாமா முடிவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்திய குமாரசாமி.

New Delhi:

காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதில் ராகுல் காந்தி பிடிவாதமாக இருக்கும் நிலையில், கர்நாடகா முதல்வர் குமாரசாமி ராகுலின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடியின் பிரமாண்ட பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்பாக, ராகுல் காந்தியை சந்தித்து பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்திய கர்நாடக முதல்வர் குமாரசாமி, காங்கிரஸூக்கு புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்றும் அதுவரை ராஜினாமா செய்யக்கூடாது என்றும் புதிய தலைவருக்கு உதவி செய்யவேண்டும் என்று அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தை தொடர்ந்து, கடந்த சனிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில், ராகுல் காந்தி தோல்விக்கு பொறுப்பேற்று, தான் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஆனால், அவரது ராஜினாமாவை காரிய கமிட்டி ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. எனினும், ராகுல் தனது ராஜினாமா செய்வதான முடிவில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. 

இதைத்தொடர்ந்து, புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க அவர் கட்சிக்கு கால அவகாசம் கொடுத்தாகவும் தெரிகிறது. ராகுலின் இந்த முடிவுக்கு அவரது தாயார் சோனியா காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோரும் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் ராகுல் காந்தியின் ராஜினாமா முடிவை ஏற்கும் மனநிலையில் காங்கிரஸின் முக்கிய மற்றும் மூத்த தலைவர்கள் இல்லை என்று சொல்லப்படுகிறது. 

அவர்கள், தொடர்ந்து ராகுலை போன் மூலம் தொடர்பு கொண்டு, ‘முடிவை மாற்றிக் கொள்ளுங்கள்' என்று வலியுறுத்தி வருகிறார்களாம். ‘ராஜினாமா செய்ய வேண்டாம். ஆனால், கட்சியில் பல விஷயங்களை மாற்றியமைக்கலாம்' என்றும் அவர்கள் அறிவுரையும் கூறியுள்ளார்களாம்.

இதேபோல், காரிய கமிட்டி கூட்டத்தின் போது ராகுல், காந்தி குடும்பத்தில் இருந்துதான் தலைவராக ஒருவர் வர வேண்டும் என்று அவசியமில்லை என்று பேசியிருக்கிறார். காங்கிரஸ் நிர்வாகிகள், பிரியங்காவின் பெயரை முன்மொழிந்துள்ளனர். அதனால் ராகுல், தன் சகோதரி, தாயாரை இதற்குள் இழுக்க வேண்டும் என்று திட்டவட்டமாக கூறியதாக கூறப்படுகிறது. 

மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் காங்கிரஸ் 52 தொகுதிகளில் மற்றுமே வெற்றி பெற்றுள்ளது. இதில் 18 மாநிலங்களில் ஒரு இடத்தைக் கூட ஜெயிக்கவில்லை. ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மாநிலங்களும் இதில் அடங்கும். டிசம்பர் மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று இந்த மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியமைத்த நிலையிலும் அங்கும் படுதோல்வி அடைந்துள்ளது. 

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் அதிர்ச்சிகரமான படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில், தங்களது கூட்டணி ஒன்றாக சிறந்து செயல்படும் என்று ராகுலுக்கு கர்நாடகா முதல்வர் குமாரசாமி உறுதியளித்துள்ளார். 

கர்நாடகாவில், ஜனதா தளம்-காங்கிரஸ் இடையே, அதிருப்தி போக்கு நிலவி வந்த நிலையில், மாநிலத்தில் மொத்தமுள்ள 28 மக்களவைத் தொகுதிகளில், 2 தொகுதிகளில் மட்டுமே இந்த கூட்டணி வெற்றி பெற்றது. மீதமுள்ள அனைத்து தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியது. இதன் பின்னரே அதிருப்தியில் இருந்த கூட்டணி தற்போது நிலையாக உள்ளது. 

இதனிடையே, கூட்டணி வைத்த ஒரு வருடத்திலே ஜே.டி.எஸ்-காங்கிரஸ் இடையே அதிருப்தி ஏற்பட்ட நிலையில், காங்கிரஸ் உறுப்பினர்கள் பாஜகவுக்கு கட்சி மாறுவதற்கு முயற்சி செய்துவருகின்றனர்.

காங்கிரஸ் முன்னாள் முதல்வர் சித்தராமையாவே இந்த அதிருப்திகளுக்கு முக்கிய காரணமாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.. எனினும், சித்தராமையா அரசுக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக குமாரசாமி ராகுலிடம் தெரிவித்துள்ளார்.


 

.