বাংলায় পড়ুন Read in English
This Article is From Sep 10, 2019

Urmila Matondkar: சேர்ந்த சில மாதங்களிலேயே காங்கிரஸிலிருந்து விலகிய கமல் பட நடிகை- பின்னணி என்ன?

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மும்பை வடக்குத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி கண்டார் உர்மிலா. 

Advertisement
இந்தியா Edited by
Mumbai:

‘இந்தியன்' திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்தவர் உர்மிலா மட்டோண்ட்கர். நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, 5 மாதங்களுக்கு முன்னர் அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இந்நிலையில், அவர் கட்சியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவைச் சேர்நதவர் உர்மிலா. இன்னும் ஒரு சில மாதங்களில் அங்கு சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தனது விலகல் குறித்து உர்மிலா, “காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே பல பிரிவுகள் அரசியல் செய்கின்றன. மும்பை காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் ஒரு மாற்றத்தைக் கொண்டுவரவும் கட்சியின் முன்னேற்றத்துக்கு உழைக்கவும் திராணியற்றவர்களாகவோ, விருப்பம் இல்லாதவர்களாகவோ இருக்கிறார்கள். 

மும்பை காங்கிரஸுக்காக உழைக்காமல், அரசியல் ஆதாயத்துக்காக என்னைப் பயன்படுத்திக் கொள்வதை நான் அனுமதிக்க மாட்டேன்.” என்று விளக்கம் கொடுத்துள்ளார். 

Advertisement

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மும்பை வடக்குத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி கண்டார் உர்மிலா. 

முன்னதாக தனது அதிருப்தி குறித்து மும்பை காங்கிரஸ் தலைவராக இருந்த மிலிந்த் தியோராவுக்கு கடிதம் எழுதியிருந்தார். அது கசியவிடப்பட்டதாகவும் உர்மிலா புகார் தெரிவிக்கிறார். “எனது கடிதம் குறித்து வெளியே தெரிவித்தது துரோகம் செய்ததற்கு சமம். அதில் பல முக்கியமான, தனிப்பட்ட வகையிலான விஷயங்களை எழுதியிருந்தேன். ஊடகங்களில் அது லீக் செய்யப்பட்டது” என்று அந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ளார் உர்மிலா. 

Advertisement
Advertisement