This Article is From Mar 28, 2020

கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியாவுக்கு 2.9 மில்லியன் டாலர் உதவி: அமெரிக்கா அறிவிப்பு

கடந்த பிப்ரவரியில் 100 மில்லியன் டாலர்கள் உதவியை ஏற்கெனவே அமெரிக்கா அறிவித்திருந்தது. உலகளாவிய அளவில் தொற்றுநோயின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் 64 நாடுகளுக்கு இந்த நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியாவுக்கு 2.9 மில்லியன் டாலர் உதவி: அமெரிக்கா அறிவிப்பு

உலகளவில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது.

ஹைலைட்ஸ்

  • உலகளவில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது.
  • இந்தியாவுக்கு 2.9 மில்லியன் டாலர் உதவி
  • அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் 64 நாடுகளுக்கு அமெரிக்கா நிதி உதவி
Washington:

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த 64 நாடுகளுக்கு 174 மில்லியன் டாலர்கள் நிதி உதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்தியாவுக்கு கூடுதல் பொருளாதார நிதியாக 2.9 மில்லியன் டாலர்களை அமெரிக்கா ஒதுக்கீடு செய்துள்ளது. 

கடந்த பிப்ரவரியில் 100 மில்லியன் டாலர்கள் உதவியை ஏற்கெனவே அமெரிக்கா அறிவித்திருந்தது. உலகளாவிய அளவில் தொற்றுநோயின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் 64 நாடுகளுக்கு இந்த நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய அரசு கொரோனாவுக்கு எதிராக ஆய்வகங்களை அமைக்கவும், வைரஸ் பாதிப்பை கண்டுபிடிக்கவும், நிகழ்வு தொடர்பான கண்காணிப்பைச் செய்யவும், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு உதவியாகவும், தயாரிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், இந்தியாவுக்கு 2.9 மில்லியன் டாலர்கள் உதவிதயாக வழங்கப்பட்டுள்ளது. 

கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவுக்கான அமெரிக்க உதவியில் 2.8 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையில் 1.4 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகை சுகாதார உதவிகளை அடித்தளமாகக் கொண்டுள்ளது, என அமெரிக்காவின் பன்னாட்டு வளர்ச்சித்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்காவின் பன்னாட்டு வளர்ச்சித் துறை உதவி நிர்வாகி போனி கிளிக் என்பவர் கூறும்போது, பொதுச்சுகாதாரத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உதவிகளை வழங்குவதில் அமெரிக்கா முன்னிலை வகிக்கிறது. 

நோய் பாதிப்பில் அதிகம் பாதிக்கப்படுவோர் மீதான அக்கறையில் அமெரிக்கா பல உயிர்களை காப்பாற்றியுள்ளது. சுகாதார நிறுவனங்களை கட்டமைத்து சமுதாயங்கள் மற்றும் நாடுகளிடையே நிலைத்தன்மையை அமெரிக்கா ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார்.

தெற்கு ஆசியாவில் 1 மில்லியன் டாலர்கள் சுகாதார நிதியுதவியை அமெரிக்கா அளித்துள்ளது, எதிர்காலத்தில் நோய் தொற்று மற்றும் பரவலைத் தடுக்கவும், தயாரிப்புகளில் ஈடுபடவும் இந்த நிதியுதவியை அமெரிக்கா வழங்கி வருகிறது.

அந்தவகையில், இலங்கைக்கு 1.3 மில்லியன் டாலர்களும், நேபாளத்திற்கு 1.8 மில்லியன். டாலர்களும், வங்கதேசத்துக்கு 3.4 மில்லியன் டாலர்களும், ஆப்கானிஸ்தானுக்கு 5 மில்லியன் டாலர்களும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்கா வழங்கியுள்ளது.

.