This Article is From Jul 10, 2020

ஐரோப்பி யூனியனை தொடர்ந்து பாகிஸ்தான் விமான சேவைக்கு அமெரிக்காவும் தடை விதித்தது!

கடந்த மாதம், பாகிஸ்தானிய விமான ஓட்டிகளில் மூன்றில் ஒரு பங்கினர் போலியானவர்கள் அல்லது முறைகேடுகள் மூலம் தேர்ச்சியடைந்தவர்கள் என பாகிஸ்தான் அரசு கண்டறிந்திருந்தது.

ஐரோப்பி யூனியனை தொடர்ந்து பாகிஸ்தான் விமான சேவைக்கு அமெரிக்காவும் தடை விதித்தது!

பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்திற்கான அனுமதியை ரத்து செய்துள்ளதாக அமெரிக்க போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

சர்வதேச விமான போக்குவரத்தில் ஐரோப்பிய யூனியன், பாகிஸ்தானிய விமான சேவையான பாக்கிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (பிஐஏ) விற்கு சமீபத்தில் தடை விதித்தது. பாகிஸ்தான் விமான சேவையில் பணியாற்றும் விமானிகள், விமான ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு முறைகேடான வழியை பின்பற்றியதை பாகிஸ்தான் அரசு கண்டறிந்தது. இந்நிலையில் இந்த முடிவினை ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்டது.

தற்போது பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (எஃப்ஏஏ) கவலைகளை மேற்கோளிட்டு, பாக்கிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (பிஐஏ) விமான சேவையை அமெரிக்கா ரத்து செய்துள்ளதாக அமெரிக்க போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம், பாகிஸ்தானிய விமான ஓட்டிகளில் மூன்றில் ஒரு பங்கினர் போலியானவர்கள் அல்லது முறைகேடுகள் மூலம் தேர்ச்சியடைந்தவர்கள் என பாகிஸ்தான் அரசு கண்டறிந்திருந்தது.

யு.எஸ். தடையை பி.ஏ.ஏ உறுதிப்படுத்தியதாக பாக்கிஸ்தானின் ஜியோ நியூஸ் கூறியுள்ளது.

சமீபத்தில் பாகிஸ்தானில் நடைபெற்ற விமான விபத்தில் 97 பயணிகள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

.