சிறிய அளவிலான டோஸ்டர் போன்று இருக்கும் அந்த கருவி, கொரோனா பாதிப்பு இல்லாவிட்டால் 13 நிமிடங்களிலும் முடிவுகளை தெரிவிக்கும்.
ஹைலைட்ஸ்
- கொரோனா உள்ளதா என்பதை சோதனை செய்ய கருவி
- சிறிய அளவிலான டோஸ்டர் போன்று இருக்கும் அந்த கருவி,
- பாதிப்பு இல்லாவிட்டால் 13 நிமிடங்களில் முடிவுகளை தெரிவிக்கும்.
Washington: ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்பதை 5 நிமிடங்களில் தெரிவிக்க முடியும் என அமெரிக்காவை சேர்ந்த ஆய்வகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அபாட் லேபாரட்டரீஸ் என்ற அந்த ஆய்வகம் வெளியிட்ட அறிக்கையில், அடுத்த வார தொடக்கத்தில் இருந்து சுகாதார வல்லுநர்கள் சோதனையை தொடங்க அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துத்துறை அவசர அங்கீகாரம் வழங்கியதாக தெரிவித்துள்ளது.
சிறிய அளவிலான டோஸ்டர் போன்று இருக்கும் அந்த கருவி, மூலக்கூறு தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இந்த சோதனை மூலம் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பதன் முடிவுகளை 13 நிமிடங்களில் பெற முடியும் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளது.
இதுகுறித்து அபாட் லேபாரட்டரீஸ் தலைவரும், தலைமை இயக்க அதிகாரியுமான ராபர்ட் போர்டு கூறும்போது, கொரோனாவுக்கு எதிராக பல முனைகளில் போராட வேண்டியுள்ளது.
அப்படி இருக்கும் போது ஒரு சில நிமிடங்களில் கொரோனா இருக்கிறதா என்பதை சிறிய மூலக்கூறு சோதனை மூலம் தெரிந்துக்கொள்ள முடியும். இந்த வைரஸை எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான அளவிலான கண்டறியும் தீர்வுகளை இது தருகிறது.
வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு உடனடியாக இந்த கருவியை அனுப்பி வைக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறையுடன் இணைந்து அபாட் ஆய்வகம் பணியாற்றி வருகிறது.
இந்த சோதனையானது உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறையால் ஒப்புதலோ அல்லது அங்கீகாரமோ வழங்கப்படவில்லை. எனினும், அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்கள் மற்றும் சுகாதார வல்லுநர்களால் அவசரகால பயன்பாட்டிற்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது, என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.