This Article is From Aug 12, 2019

வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த கரடி! சுவற்றில் துளையிட்டு அட்டகாசம்!!

வீட்டிலிருந்து வெளியேற வழி தெரியாமல் இருந்த கரடி அங்கிருந்த சுவற்றில் துளையிட்டு வெளியே சென்றது.

வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த கரடி! சுவற்றில் துளையிட்டு அட்டகாசம்!!

இந்த சம்பவத்தில் வீட்டில் இருந்த யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

அமெரிக்காவில் கரடி ஒன்று வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று, அங்கிருந்த சுவற்றில் துளையிட்டு அட்டகாசம் செய்துள்ளது. இந்த சம்பவம் அமெரிக்காவின் கொலாராடோவில் நடந்துள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வீட்டிலிருந்த பொருள் ஒன்றின் வாசனை கரடியை கவர்ந்து இழுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
 

இந்த சம்பவத்தின்போது அதிர்ஷ்டவசமாக வீட்டிலிருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கரடியின் அட்டகாசம் தொடர்பான படங்களுக்கு சமூக வலைதளங்களில் கமென்டுகள் குவிந்து வருகின்றன. 

'பொதுமக்கள் தங்களது வீட்டின் கதவுகளையும், ஜன்னல்களையும் பூட்டி விட்டு செல்கிறார்கள். அப்படி செய்வதால் பாதுகாப்புடன் இருப்பதாக நம்புகிறார்கள். ஆனால் இந்த கரடி சுவரையும் துளைத்து அட்டகாசம் செய்துள்ளது' என்று ஒருவர் கமென்ட் செய்திருக்கிறார். 

கடந்த ஜூன் மாதம் மோன்டனா நகரில் கரடி ஒன்று வீட்டிற்குள் புகுந்து, அங்கிருந்த பொருட்களையெல்லாம் சேதம் செய்து விட்டு தூங்கத் தொடங்கியது. பின்னர் மயக்க மருந்தைக் கொடுத்து வனத்துறையினர் கரடியை மீட்டுச் சென்றனர். 

Click for more trending news


.