மணிக்கு 72-80 கிலோமீட்டர் வேகத்தில் பனிப்புயல் வேகம் இருந்த்தால் விமானங்கள் ரத்து
Chicago: அமெரிக்காவில் கூறப்பட்ட திடீர் பனிப்புயல் அறிவிப்பால் தாங்க்ஸ் கிவிங்க் (Thanks giving) வாரத்தின் கடைசி நாளான நேற்று சுமார் 1,230 க்கும் மேற்ப்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதை தொடர்ந்து விமான நிலையங்களிலே பயணிகள் நிறுத்தி வைக்கப்பட்டனர்.
மேலும் அமெரிக்காவில் உள்ள கான்சாஸ்யிலிருந்து சிகாகோ வரை பனிபொழிவு ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில் பனிப்பொழிவு இன்னும் மோசமடைந்த காரணத்தால் விமானங்கள் உடனடியாக ரத்து செய்யப்பட்டன.
புயல் மணிக்கு 48- 56 கிலோமீட்டர் வேகத்தில் தொடங்கிய நிலையில் பனிப்பொழிவு தொடங்கியவுடன் சுமார் மணிக்கு 72-80 கிலோமீட்டர் வேகத்தில் புயலின் வேகம் கூடியது.
இதனால் 200 க்கும் மேற்ப்பட்ட வெளிநாடு செல்லும் விமானங்களும் ரத்தானது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)