This Article is From Feb 09, 2019

சீனாவுடன் வர்த்தக போர் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை: வெள்ளை மாளிகை தகவல்!

பேச்சுவார்த்தைகளின் படி ஒப்பந்தங்கள் மார்ச் 1ம் தேதியுடன் முடிவுக்கு வரும் என்றும் அதன்பின் அமெரிக்கா 200 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு இரண்டு மடங்காக கட்டணங்களை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

சீனாவுடன் வர்த்தக போர் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை: வெள்ளை மாளிகை தகவல்!

சீனாவிடம் மிகப்பெரிய மாற்றங்களை விரும்புவதாக வாஷிங்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Washington:

அமெரிக்க அதிகாரிகள் பிப்ரவரி 14,15 ஆகிய தேதிகளில் சீனாவுடன் வர்த்தக போர் தொடர்பான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என்று வெள்ளைமாளிகை தகவல்கள் தெரிவித்துள்ளன.

பேச்சுவார்த்தைகளின் படி ஒப்பந்தங்கள் மார்ச் 1ம் தேதியுடன் முடிவுக்கு வரும் என்றும் அதன்பின் அமெரிக்கா 200 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு இரண்டு மடங்காக கட்டணங்களை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தையில் வர்த்தக பிரதிநிதி ராபர்ட் மற்றும் செயலாளர் ஸ்டீவன் கலந்து கொள்வார்கள் என்றும், மேலும் அதிபர் ட்ரம்ப்பால் உலக வங்கி தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட டேவிட் மல்பாஸ் ஆகியோரும் கலந்து கொள்வதாகவும் கூறப்பட்டுள்ளது.

எனினும் வெள்ளை மாளிகையின் சீன விமர்சகர் பீட்டர் நவரோ இந்த அணியில் இடம்பெறவில்லை.

சர்வதேச வர்த்தகத்தை கருத்தில் கொண்டு இந்த பேச்சு வார்த்தையில் சுமூக முடிவுகள் எட்டப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த பேச்சுவார்த்தை முடிவதற்கு முன்பு ஜி ஜிங்பிங்கை சந்திப்பதில்லை என்று கூறியிருந்தார். 

இறுதி முடிவுக்கு பின்னரே சந்திப்பு குறித்து தகவல்கள் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

சீனாவிடம் மிகப்பெரிய மாற்றங்களை விரும்புவதாக வாஷிங்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் அமெரிக்காவின் அறிவுசார் சொத்துரிமையும் அடங்கும் என்று கூறப்படுகிறது.

.