Read in English
This Article is From Jul 11, 2018

சீன இறக்குமதி பொருட்களுக்கு மேலும் வரி அதிகரிப்பு… அமெரிக்கா அதிரடி!

டொலால்டு ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, மற்ற நாடுகளுடன் வர்த்தகப் போரில் ஈடுபட்டுள்ளது

Advertisement
உலகம்
Washington:

டொலால்டு ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, மற்ற நாடுகளுடன் வர்த்தகப் போரில் ஈடுபட்டுள்ளது. சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிப்பை அதிகரித்த அமெரிக்கா, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கும் 25 சதவிகித வரியை அதிகரித்தது. 34 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்த வரி விதிப்பு பொருந்தும் என்று அமெரிக்க அறிவித்தது. இந்த அறவிப்பை அடுத்து, இதே அளவு வரியை அமெரிக்கப் பொருட்களுக்கு விதித்தது சீனா. 

இதனால், அமெரிக்க அரசு கொதிப்படைந்துள்ளதாக கூறப்பட்டது. அதை உண்மை என்று நிரூபிக்கும் வகையில், அமெரிக்கா, தற்போது 300 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான சீனப் பொருட்களுக்கு 10 சதவிகித வரியை அதிகரிக்கப் போவதாக தெரிவித்துள்ளது.

எஃகு, அலுமினியம், நிலக்கரி, ரசாயனப் பொருட்கள் உள்ளிட்ட தொழிற்சாலைகளுக்குப் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கும், ஃபர்னிச்சர், பெட்டிகள், பேக்ஸ், சைக்கிள், டாய்லெட் பேப்பர் அடங்கிய அன்றாட பொருட்களுக்கும் இந்த வரி விதிப்புப் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. 

Advertisement

‘கடந்த ஓர் ஆண்டாக ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம், சீனாவிடம் முறையாக வர்த்தகத்தில் ஈடுபடாதீர்கள் என்று வலியுறுத்தி வந்தோம். ஆனால், அவை எதற்கும் செவி மடுக்காமல் வரி வதிப்பை மேலும் அதிகரித்தது சீனா. இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது’ என்று அமெரிக்கத் தரப்பு கொதி கொதித்துள்ளது. 

உலகின் இரண்டு மிகப் பெரிய பொருளாதார நாடுகள் இப்படி வர்த்தகப் போர் புரிவது, சர்வதேச சந்தையை பாதிக்கும் என்று முதலீட்டாளர்கள் அஞ்சுகின்றனர். 

Advertisement

இந்த விவகாரம் குறித்து சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ‘சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 500 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படும்’ என்று எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இரண்டு மாதத்துக்கு இந்த வரி அதிகரிப்பு குறித்து மக்களின் கருத்தைக் கேட்டுள்ளது அமெரிக்க அரசு. ஆனால், அமெரிக்காவின் எதிர்கட்சியினர் ட்ரம்பின் இந்த நடவடிக்கையை விமர்சித்துள்ளனர்.

Advertisement

குறிப்பாக, ‘வரி அதிகரிப்பு என்பது மக்களின் தலையில் தான் வந்து விழும். சீனப் பொருட்களுக்கு வரி அதிகரிப்பு செய்தால், அதை அதிக விலை கொடுத்து சாமானிய மக்கள் தான் வாங்கப் போகின்றனர். எனவே, இது ட்ரம்ப் அரசு மக்களுக்கு செய்யும் துரோகம் ஆகும்’ என்று கருத்து பரவலாக கூறப்பட்டு வருகிறது. 

இந்த வரி அதிகரிப்பு அறிவிப்பு குறித்து சீனத் தரப்பில் எந்த அதிகாரபூர்வ பதிலும் இல்லை. ஆனால், சீன அரசின் அதிகாரபூர்வ ஆங்கில நாளிதழான ‘சீனா டெய்லி’, ‘சீனாவுக்கு அமெரிக்காவின் நடவடிக்கையை எதிர்கொள்ள ஒரேயொரு வழி தான் இருக்கிறது. நெருப்பை நெருப்பைக் கொண்டு தான் போராட வேண்டும்’ என்று கருத்து தெரிவித்துள்ளது. 



(हेडलाइन के अलावा, इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है, यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)
Advertisement