This Article is From Dec 10, 2019

Amit Shah-வுக்கு எதிராக சாட்டையை சுழற்றிய அமெரிக்க ஆணையம்; இந்தியா கொடுத்த பதிலடி!

Citizenship (Amendment) Bill: பல மணி நேர விவாதங்களுக்குப் பிறகு, திருத்தப்பட்ட குடியுரிமை மசோதா லோக்சபாவில் நேற்று நிறைவேறியது

Amit Shah-வுக்கு எதிராக சாட்டையை சுழற்றிய அமெரிக்க ஆணையம்; இந்தியா கொடுத்த பதிலடி!

Citizenship (Amendment) Bill: அரசியல் சட்ட சாசனத்திற்கு எதிரானது இந்த மசோதா என்னும் வாதத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது. 

ஹைலைட்ஸ்

  • 'கடந்த காலத்தை வைத்துப் பார்க்கையில், USCIRF நிலைப்பாடு ஆச்சரியமில்லை'
  • இந்திய வெளியவுறவுத் துறை அமெரிக்க அணையத்திற்கு பதிலடி கொடுத்துள்ளது
  • Citizenship (Amendment) Bill ராஜ்யசபாவில் நாளை தாக்கல் செய்யப்படும்
New Delhi:

Citizenship (Amendment) Bill: அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச மத சுதந்திரத்துக்கான அரசு ஆணையம் (USCIRF), திருத்தப்பட்ட குடியுரிமை மசோதாவை அறிமுகப்படுத்திய காரணத்திற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக அமெரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதா ஒப்புதல் பெற்றால் அமித்ஷாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த ஆணையம் குறிப்பிட்டுள்ளது. இதற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் பதிலடி கொடுத்துள்ளது.

வெளியுறவுத் துறை அமைச்சகம், இது குறித்துப் அறிக்கை மூலம் தெரிவிக்கையில், “USCIRF கடந்த கால வரலாற்றை எடுத்துப் பார்க்கும்போது அவர்களின் நிலைப்பாடு பெரிய ஆச்சரியத்தைக் கொடுக்கவில்லை. அண்டை நாடுகளில் மத ஒடுக்குமுறைக்கு ஆளான சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குகிறது இந்த மசோதா.

குடியுரிமை திருத்த மசோதாவோ, தேசிய குடிமக்கள் பதிவேடோ, தற்போது இந்தியாவில் இருக்கும் எவரையும் அவர்களின் குடியுரிமையை இழக்கவைக்கும் வேலையைச் செய்யாது. அப்படி சொல்லப்படும் தகவல்கள் தவறானவை. அனைத்து நாடுகளுக்கும் தன் குடியுரிமை குறித்த சட்டங்களை வகுத்துக் கொள்ள உரிமையுள்ளது. அதைத்தான் இந்தியாவும் செய்ய உள்ளது. அதை வைத்துப் பார்க்கும்போது, USCIRF நிலைப்பாடு வருத்தமளிக்கிறது,” என்று குறிப்பிட்டுள்ளது. 

திருத்தப்பட்ட குடியுரிமை மசோதாவில், பாகிஸ்தான் வங்கதேசம் மற்றும் அப்கானிஸ்தானில் இருக்கும் இந்து, சீக்கியர்கள், புத்தர்கள், ஜெயினர்கள், பார்சிக்கள் மற்றும் கிறித்துவர்கள், டிசம்பர் 31, 2014 ஆம் ஆண்டு வரை மத ஒடுக்குமுறைக்கு ஆளாகி இந்தியாவுக்கு வந்திருந்தால் அவர்கள் அகதிகளாக நடத்தப்படாமல், குடியுரிமை வழங்கப்படும் என்கிறது.

0q21d70g

இந்த மசோதா மூலம் பாகிஸ்தான், வங்கதேசம், அப்கானிஸ்தானைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு இந்தியாவில் குடியுரிமை கொடுக்கப்படாது என்பதை முன்வைத்து எதிர்க்கட்சிகள் குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன.

இது குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச மத சுதந்திரத்துக்கான அரசு ஆணையம், USCIRF, லோக்சபாவில் மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளது. 

“திருத்தப்பட்ட குடியுரிமை மசோதா, இரு அவைகளிலும் ஒப்புதல் பெற்றுவிட்டால், உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து சிந்திக்க வேண்டும்.

இந்த மசோதாவானது இந்தியாவை தவறான திசையில் இட்டுச் செல்லும். இந்திய சட்ட சாசனத்துக்கு எதிராகவும் மதச்சார்பின்மைக்கு எதிராகவும் இது செயல்படும். 

இந்திய அரசு, குடியுரிமை வழங்க மதத்தைக் கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது. இது பல லட்ச முஸ்லிம்களின் குடியுரிமை பறிபோக வழிவகுக்கும்.” என்று ஆணையம் தெரிவித்துள்ளது. 

பல மணி நேர விவாதங்களுக்குப் பிறகு, திருத்தப்பட்ட குடியுரிமை மசோதா லோக்சபாவில் நேற்று நிறைவேறியது. 311 லோக்சபா உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்க, 80 பேர் எதிர்ப்புத் தெரிவித்தனர். அரசியல் சட்ட சாசனத்திற்கு எதிரானது இந்த மசோதா என்னும் வாதத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது. 

இந்த மசோதா மூலம் பாகிஸ்தான், வங்கதேசம், அப்கானிஸ்தானைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு இந்தியாவில் குடியுரிமை கொடுக்கப்படாது என்பதை முன்வைத்து எதிர்க்கட்சிகள் குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன.

இந்தியாவில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி காலத்தில் இருந்தே, உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டுத் தலையீட்டை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தொடர்ந்து சொல்லி வருகிறது. அதனால்தான், இதற்கு முன்னரும் இந்தியாவில் மத சுதந்திரம் பற்றி கருத்து கூறியிருந்த USCIRF அமைப்பினருக்கு இந்தியா விசா தரவில்லை.

அதேபோல USCIRF சொல்வதால் அமெரிக்க அரசு நடவடிக்கை எடுத்துவிடும் என்று சொல்வதற்கில்லை. ஆனால், அதன் சிபாரிசின் பேரில் நடவடிக்கை முற்றிலும் நடவடிக்கை எடுக்கப்படாது என்று உறுதிபடவும் கூற முடியாது. 


 

.