This Article is From Nov 22, 2018

வீட்டை சுத்தம் செய்ததால் கிடைத்த பரிசு!

டிக்கெட் கிடைத்தவுடன் லாட்டரி நிறுவனத்தின் இணையதளத்திற்க்கு சென்று தனது டிக்கெட்டுக்கு ஏதாவது பரிசு கிடைக்குமா என பார்த்த டீனாவுக்கு, அனைத்து எண்களும் சரியாக மேட்ச் ஆனதால் பரிசுத்தொகையை தட்டிச் சென்றனர்.

வீட்டை சுத்தம் செய்ததால் கிடைத்த பரிசு!
Washington, United States:

கிறிஸ்துவர்கள் கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்றான ‘தாங்க்ஸ் கிவ்விங் ' என்று அழைக்கப்படும் இயேசு கிறிஸ்துவுக்கு நன்றி தெரிவிக்கும் நாளில் மற்றவர்களுக்கு பரிசு அளித்து கொண்டாடுவதுண்டு.

இந்நிலையில் 2018-ன் ‘தாங்க்ஸ் கிவ்விங் ' தினத்திற்க்கு அமெரிக்காவில் உள்ள லுசியானா நகரத்தை சேர்ந்த ஹாரோல்டு மற்றும் டீனா இகேரென்பேர்கு தம்பதியனர்க்கு சற்றும் எதிர்பாராத பரிசு கிடைத்துள்ளது.

நீண்டநாளாக தொலைந்து போன லாட்டரி டிக்கெட்தான்அந்த பரிசு. இந்த தம்பதியனரிடம் கிடைத்த லாட்டரி டிக்கெட் மிகவும் மோசமான நிலையில் கிடைத்தாலும் அதன் மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் 12 கோடிகளாகும்.

பரிசைப் பெற வேண்டிய கெடு இன்னும் இரண்டு வாரத்தில் முடிய இருக்கும் நிலையில் வீட்டை சுத்தம் செய்த போது கிடைத்த லாட்டரி டிக்கெட் அத்தம்பதியனரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

‘'தாங்க்ஸ் கிவ்விங் தினத்திற்க்கு எங்களது குடும்பம் ஒன்றினைய முடிவெடித்த நிலையில் நாங்கள் வீட்டை சுத்தம் செய்ய முடிவெடுத்தோம். அத்துடன் வேறு சில லாட்டரி டிக்கெட்டும் கிடைத்தன'' என்று லாட்டரி டிக்கெட் பரிசை வென்ற டீனா, லூசியான தெரிவித்தார்.

டிக்கெட் கிடைத்தவுடன் லாட்டரி நிறுவனத்தின் இணையதளத்திற்க்கு சென்று தனது டிக்கெட்டுக்கு ஏதாவது பரிசு கிடைக்குமா என பார்த்த டீனாவுக்கு, அனைத்து எண்களும் சரியாக மேட்ச் ஆனதால் பரிசுத்தொகையை தட்டிச் சென்றனர்.

மேலும் வென்ற பணத்தை பணி ஓய்வு பெறும் காலத்தில் பயன்படுத்த முடிவு செய்தனர்.
 

.