Read in English
This Article is From Jun 24, 2019

அமெரிக்காவின் சைபர் தாக்குதல் தோல்வி அடைந்து விட்டது - அறிவித்தது ஈரான் அரசு

இரானின் ஆயுத அமைப்புகள் மீது அமெரிக்கா சைபர் தாக்குதலை நடத்தியுள்ளது. அந்நாட்டின் மீது நடத்தவிருந்த வான் தாக்குதலை டிரம்ப் நிறுத்திய பிறகு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க தெரிவித்துள்ளது.

Advertisement
உலகம் Edited by

சைபர் தாக்குதல் தோல்வியை அடைந்து விட்டதாக ஈரான் தொலைதொடர்பு அமைச்சர் தெரிவித்துள்ளார் (Representational)

LONDON:

அமெரிக்காவின் சைபர் தாக்குதல் தோல்வியடைந்து விட்டது  என்று ஈரான் நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

இரானின் ஆயுத அமைப்புகள் மீது அமெரிக்கா சைபர் தாக்குதலை நடத்தியுள்ளது. அந்நாட்டின் மீது நடத்தவிருந்த வான் தாக்குதலை டிரம்ப் நிறுத்திய பிறகு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் ராக்கெட் மற்றும் ஏவுகணைகளை கட்டுப்படுத்தும் கணிணி அமைப்புகள் மீது நடத்தப்பட்டன.

இந்த தாக்குதல், அமெரிக்காவின் ஆளில்லா விமானங்களை சுட்டுவீழ்த்தியது மற்றும் எண்ணெய் டாங்கர்களை தாக்கியது ஆகியவற்றிற்கு பதில் நடவடிக்கை எனத் தெரிய வந்துள்ளது. 

Advertisement

இது குறித்து ஈரான் நாட்டு அரசு அந்த சைபர் தாக்குதல் தோல்வியை அடைந்து விட்டதாக ஈரான் தொலைதொடர்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். பெண்டகன் நீண்ட காலம் திட்டமிட்டு செயல்படுத்திய சைபர் தாக்குதல் தோல்வியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அமெரிக்காவிற்கும் ஈரானிற்கும் இடையே போர்பதட்டம் அதிகரித்துள்ளது. 

 அமெரிக்கா கடுமையாக முயற்சித்தது,ஆனால் அந்த தாக்குதல் வெற்றியடையவில்லை என்று தகவல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சர் முகம்மது ஜாவத் அசாரி தெரிவித்துள்ளார். 

Advertisement
Advertisement