தற்போது அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 5 லட்சத்தினை நெருங்கிக் கொண்டிருக்கின்றது.
Washington: கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று தற்போது சர்வதேச அளவில் பரவி பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் 2,108 கொரோனா உயிரிழப்புகளுடன் ஒரே நாளில் 2,000 க்கும் மேற்பட்ட கொரோனா உயிரிழப்புகளைப் பதிவு செய்த முதல் நாடு அமெரிக்கா. என அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
தற்போது இந்நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது18,586 ஆக உள்ளது. முன்னதாக இத்தாலி இந்த தொற்றால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இத்தாலியில் 18,849 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இத்தாலியே இதுவரை அதிக இழப்புகளைக் கொண்ட நாடுகளில் முன்னணியில் உள்ளது.
கடந்த 24 மணி நேரக் கணக்குப்படி, அமெரிக்காவில் 35,098 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 5 லட்சத்தினை நெருங்கிக் கொண்டிருக்கின்றது.
சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். 16 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அளவிலான இறப்புகள் முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையாகும்.