முதலை வந்தபோதிலும் விளையாட்டை நிறுத்தாத கோல்ஃப் வீரர்.
கோல்ஃப் மைதானத்தில் விளையாட்டு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது முதலை ஒன்று பார்வையாளராக வலம் வந்தது. ஏதோ காட்டுக்குள் ஹாயாக செல்வதைப் போன்று முதலை சென்ற வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இப்போதெல்லாம் முதலைகளை சர்வ சாதாரணமாக பார்க்க முடிகிறது. வீட்டு விலங்குகளைப் போன்று அவை தெருக்களில் உலா வரும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் காணக்கிடைக்கின்றன.
இந்த நிலையில், ஆர்லாண்டோவில் உள்ள கோல்ஃப் மைதானத்தில் விளையாட்டு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது முதலை ஒன்று சர்வ சாதாரணமாக மைதானத்தை கடந்து சென்றது. இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
மொத்தம் 7 அடி நீளம் கொண்டதாக இந்த முதலை இருந்தது. இந்த வீடியோவை பதிவிட்டிருக்கும் ஸ்டீல் லாபர்டி என்பவர், 'அமெரிக்காவில் கோல்ஃப் விளையாட்டு சற்று வித்தியாசமானதாக இருக்கும்' என்று தலைப்பு கொடுத்துள்ளார்.
கோல்ஃப் விளையாட்டை சற்று நேரம் பார்த்துவிட்டு அருகில் உள்ள ஏரிக்குள் சென்று முதலை மறைந்து கொண்டது. புளோரிடா மாகாணத்தை பொருத்தவரை முதலைகள் சர்வ சாதாரணமாக எங்கும் நடமாடுகின்றன. சில நாட்களுக்கு முன்பாக முதலை ஒன்று கடற்படை பயிற்சி மைதானத்தின் வேலியை குதித்து உள்ளே சென்றது. இதேபோன்று நீச்சல் குளத்தில் ஒரு முதலை குளித்தது. ஜன்னலை உடைத்துக் கொண்டு ஒரு முதலை வீட்டிற்கு சென்ற சம்பவமும் அமெரிக்காவில் நடந்திருக்கிறது.
Click for more
trending news