ஹச்1பி விசாக்களுக்கான ஆண்டு வரம்பை 65000-ஆக ஆண்டுதோறும் நிர்ணயித்துள்ளனர்.
Washington: அமெரிக்காவில் ட்ரம்ப் அரசு ஹச்1பி விசா தொடர்பான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி அதிக திறன் கொண்டவர்களுக்கும், நிறைய சம்பளம் வாங்கும் நபர்களுக்கு மட்டுமே இனி ஹச்1பி விசா என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
புதிய மெரிட் அடிப்படையிலான சட்டத்தின் படி நிர்ணயிக்கப்பட்ட ஆண்டு வருமானம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று அமெரிக்க குடிமக்கள் மற்றும் குடிவரவு சேவைகள் தெரிவித்துள்ளது.
ஹச்1பி விசாக்களுக்கான ஆண்டு வரம்பை 65000-ஆக ஆண்டுதோறும் நிர்ணயித்துள்ளனர். முதல் 20 ஆயிரம் விண்ணப்பங்கள் அமெரிக்காவில் உயர்கல்வி பெறுபவர்கள் பயன்பெறும் விதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா வெளிநாட்டு பணியாளர்களை உயர் கல்வியோடு அனுமதிக்கும்பட்சத்தில் மெரிட் முறையை கொண்டு விசா வழங்குவது எளிதாக இருக்கும் என்று அமெரிக்க உள்துறை அமைச்சகம் நம்புகிறது.
இதற்கான பொதுமக்கள் கருத்துகள் டிசம்பர் 3 முதல் ஜனவரி 2 வரை கேட்கப்படவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் பட்டம் பெற்றவர்களுக்கு இதில் 16 சதவிகிதம் ஒதுக்கப்படும் என்றும், அதாவது சுமார் 5400 பேர் இதன் மூலம் பயன்பெறுவார்கள் என்றும் தெரிகிறது.
இதனை டிஜிட்டல் மயமாக்கியதன் மூலமாக அமெரிக்க குடியுரிமை அதிகாரிகளின் வேலைப்பளு குறையும். ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களை வாங்கி சரிபார்ப்பது கடினம் என்று கூறப்பட்டுள்ளது.