This Article is From Jan 23, 2019

"அரசு முடங்கியதால் காசு இல்லை" ட்ரம்பிடம் கதறும் எஃப்பிஐ ஏஜெண்ட்கள்

அமெரிக்க அலுவல்கள் முடங்கியுள்ளதால் எஃப்பிஐ ஏஜெண்ட்களின் வேலைக்கான நிதி ஒதுக்குவதில் சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

13,000 ஏஜெண்ட்கள் பாதிக்கபட்டுள்கனர் என்று கூன்னோர் தெரிவித்துள்ளார்.

Washington:

அமெரிக்க அலுவல்கள் முடங்கியுள்ளதால் எஃப்பிஐ (FBI) ஏஜெண்ட்கள் தங்களின் வேலைக்கான நிதி ஒதுக்குவதில் சிக்கல் எழுந்துள்ளதாக கூறியுள்ளனர். உளவாளிகளுக்கு பணமளிப்பது, அண்டர்கவர் நடவடிக்கைகளுக்கு பணம் செலவழிப்பது. அதற்காக போதைப் பொருட்களை வாங்குவது ஆகியவற்றுக்கு பணம்  தேவை என்று கூறப்பட்டுள்ளது.

எஃப்பிஐ ஏஜெண்ட் அமைப்பை சேர்ந்த கூன்னோர் கூறும்போது, "ஏஜெண்ட்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்" என்று கூறியுள்ளார்.

"அரசு அலுவல்கள் தொடர்ந்து முடங்குவதால் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வது சிரமமாக உள்ளது. இது தொடர்ந்தால் நிலை மிகவும் மோசமாகும்" என்று கூறியுள்ளார்.

அமெரிக்க மெக்ஸிகோ எல்லையில் சுவர் கட்ட 5 பில்லியன் டாலர் பணம் வேண்டும் என்று கூறி ட்ரம்ப் அரசு அலுவல்களை முடக்க துவங்கினார். இதனால் 8 லட்சம் பேர் வேலையின்றி, சம்பளமின்றி உள்ள சூழல் உருவாகியுள்ளது. 

13,000 ஏஜெண்ட்கள் பாதிக்கபட்டுள்கனர் என்று கூன்னோர் தெரிவித்துள்ளார்.

நாட்டு நலனை அக்கறையில் கொண்டு இதற்கு தீர்வு காண வேண்டும் என்று எஃப்பிஐ ஏஜெண்ட்கள் தெரிவித்துள்ளனர்.

.