ஜான்ஸ் ஹாப்கின்ஸ் தகவலின் படி, அமெரிக்காவில் 1,178 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஹைலைட்ஸ்
- கொரோனா பாதிப்பு: சீனா, இத்தாலியை பின்னுக்கு தள்ளி அமெரிக்கா முதலிடம்!
- அமெரிக்காவில் 1,178 பேர் உயிரிழந்துள்ளனர்.
- இந்த வைரஸால் அமெரிக்காவில் 83,000க்கும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
New York: கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்ட சீனா, இத்தாலியை பின்னுக்கு தள்ளி அமெரிக்கா தற்போது முதலிடம் வகிக்கிறது.
உலகளவில் 5 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது. பணக்கார நாடுகளில் கூட ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், பல கோடி பேரின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
உலகளவில், கொரோனா பாதிப்புக்கு 23,293 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அமெரிக்காவில் 1,178 பேர் உயிரிழந்துள்ளனர்.
நிதி, விஞ்ஞானம், மருத்துவம், மருந்துகள் மற்றும் ராணுவம் உள்ளிட்ட அனைத்து வளங்களையும் பயன்படுத்தி, அதன் பரவலைத் தடுக்கவும், எங்களது குடிமக்களைப் பாதுகாக்கவும் நாங்கள் போர் நடத்தி வருகிறோம், ”என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
சுமார் 40 சதவிகித அமெரிக்க மக்கள் ஊரடங்கு உத்தரவுகளின் கீழ் உள்ளனர். தொடர்ந்து, குடிமக்கள் சமூக விலகலை கடைப்பிடிப்பதன் மூலம் தங்கள் பங்கைச் செய்யுமாறு டிரம்ப் வலியுறுத்தினார்: "வீட்டிலேயே இருங்கள், சற்று ஓய்வெடுங்கள், வீட்டிலேயே இருங்கள்." என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை இல்லாத அளவாக அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 17,941 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் இத்தாலி சீனாவை பின்னுக்குத் தள்ளி அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
நேற்று ஒரே நாளில் அமெரிக்காவில் மட்டும் 266 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85,268-ஆகவும், உயிரிழப்பு 1,178 ஆகவும் அதிகரித்துள்ளது. இதனால், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் முன்னனியில் இருந்த சீனா, இத்தாலியை பின்னுக்கு தள்ளி அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது.
கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 2,783 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாட்களாக இத்தாலியில் கொத்துக்கொத்தாக மக்கள் உயிரிழந்து வந்த நிலையில், நேற்று ஸ்பெயின் இத்தாலியை மிஞ்சியது.
ஸ்பெயினில் நேற்று ஒரே நாளில் மட்டும் 718 பேர் உயிரிழந்தனர். இறப்பு எண்ணிக்கை 4,365 ஆக உயர்ந்துள்ளது. ஸ்பெயினில் 57,786 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இத்தாலியில் 712 பேர் உயிரிழந்ததால் இறப்பு எண்ணிக்கை 8, 215 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் 80,589 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
ஈரானில் 29 ,406 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2, 234 ஆக அதிகரித்துள்ளதுஃபிரான்ஸில் 29 ,155 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு 1, 696 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 365 பேரை கொரோனா பலி கொண்டுள்ளது.