This Article is From Aug 09, 2018

இரசாயன தாக்குதல்: ரஷ்யா மீது அமெரிக்கா புதிய தடைகள் விதிப்பு

கடந்த புதன்கிழமை அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்யா மீது தடைகள் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது

இரசாயன தாக்குதல்: ரஷ்யா மீது அமெரிக்கா புதிய தடைகள் விதிப்பு
Washington, United States:

வாஷிங்டன்: கடந்த மார்ச் மாதம், இங்கிலாந்து சாலிஸ்பர்ரி நகரத்தில் முன்னாள் ரஷ்ய உளவாளி செர்கெய் ஸ்கிரிபால், அவரது மகள் யூலியா ஆகியோர் நினைவிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்

இந்த தாக்குதலுக்கு ரஷ்யா தான் காரணம் என்று பிரிட்டன் குற்றஞ்சாட்டியது. எனினும், இந்த குற்றத்தை ரஷ்யா சார்பில் தீவிரமாக மறுக்கப்பட்டது. 

முன்னாள் உளவாளி மீது ‘நோவிசோக்’ எனும் நச்சுப்பொருளால் தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது உறுதியான பிறகு, ரஷ்யா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க தெரிவித்துள்ளது. 

அதனை தொடர்ந்து, கடந்த புதன்கிழமை அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்யா மீது தடைகள் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. “சர்வதேச சட்டங்களை எதிர்த்து, ரசயான ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்தியுள்ளது” என்று அமெரிக்காவின் செய்தித்தொடர்பாளர் ஹீதர் நாரெட் தெரிவித்துள்ளார்.

.