Read in English
This Article is From Nov 07, 2018

அமெரிக்க இடைக்காலத் தேர்தல்: போட்டாப் போட்டியில் குடியரசு, ஜனநாயக கட்சிகள்!

பிரதிநிதிகள் சபையில் தேவையான 23 இடங்களைக் கைப்பற்றி ஜனநாயக கட்சி பெரும்பான்மை பெரும் என்று தெரிகிறது

Advertisement
உலகம்

100 பேர் இருக்கும் செனட் சபையில், குடியரசுக் கட்சி பெரும்பான்மை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது

Washington:

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில், ஜனநாயக கட்சி, பிரதிநிகள் சபையைக் கைப்பற்றியுள்ளது என்றும், அதிபர் ட்ரம்ப் அங்கம் வகிக்கும் குடியரசுக் கட்சி, செனட் சபையில் பெரும்பான்மையைத் தக்கவைத்துக் கொண்டது எனவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. 

பிரதிநிதிகள் சபையில் தேவையான 23 இடங்களைக் கைப்பற்றி ஜனநாயக கட்சி பெரும்பான்மை பெரும் என்று தெரிகிறது. விர்ஜினியா, ஃப்ளோரிடா, பென்சில்வேனியா, கொலராடோ ஆகிய இடங்களில் ஜனநாயக கட்சி வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொனால்டு ட்ரம்ப், அதிபராக பொறுப்பேற்ற பின்னர் நடக்கும் முதல் தேர்தல் இதுவென்பதால், அவரின் தலைமையிலான அரசுக்கு மக்கள் எப்படி எதிர்வினையாற்றுகிறார்கள் என்பதை மதிப்பிட இந்த இடைக்காலத் தேர்தல் உதவும் என்று கூறப்பட்டது. 

அதே நேரத்தில் 100 பேர் இருக்கும் செனட் சபையில், குடியரசுக் கட்சி பெரும்பான்மை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இண்டியானா மற்றும் வடக்கு டகோடா மாகாணங்களில் ஜனநாயக கட்சியை, குடியரசு கட்சி வீழ்த்தி வெற்றி வாகை சூடியுள்ளது என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி தெரிவிக்கின்றன. ஆனால் தென்னஸி மற்றும் டெக்சாஸ் மாகாணங்களில் தொடர்ந்து இழுபறியான நிலை நீடித்து வருகிறதாம். இடைக்காலத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்தது.

Advertisement
Advertisement