This Article is From Sep 12, 2018

புற்றுநோய்க்கான சிகிச்சை ஆராய்ச்சி - அமெரிக்க வாழ் இந்தியருக்கு 6.5 மில்லியன் டாலர் நிதியுதவி

அருள் சின்னையனுக்கு ‘தலைசிறந்த ஆராய்ச்சியாளர்’ விருது அளித்து ஆராய்ச்சிக்காக 6.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியுதவி அளித்துள்ளது

புற்றுநோய்க்கான சிகிச்சை ஆராய்ச்சி - அமெரிக்க வாழ் இந்தியருக்கு 6.5 மில்லியன் டாலர் நிதியுதவி

பேராசிரியர் அருள் சின்னையன்

Washington:

அமெரிக்க தேசிய புற்றுநோய் மையம், அமெரிக்க வாழ் இந்தியர் அருள் சின்னையனுக்கு ‘தலைசிறந்த ஆராய்ச்சியாளர்’ விருது அளித்து அவரது ஆராய்ச்சிக்காக 6.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியுதவி அளித்துள்ளது. மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அருள் சின்னையனுக்கு இவ்விருதும் நிதியுதவியும் அளிக்கப்பட்டு அடுத்த ஏழு ஆண்டுகளுக்கான புற்றுநோய் சிகிச்சை முறைகளுக்கான ஆராய்ச்சி மேற்கொள்ள உதவி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேராசிரியர் அருள் சின்னையன் கூறுகையில், “புற்றுநோயியல் சிகிச்சை முறையில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இவை அனைத்தின் மூலமும் புற்றுநோய் பாதிக்கப்பட்டோருக்கு தகுந்த சிகிச்சை முறைகளை அளிக்க ஆராய்ச்சிகள் வளர்ந்து வருகின்றன” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “இந்த நிதியுதவி எங்களது ஆராய்ச்சிக்கு கூடுதல் பலம் சேர்ப்பதாக உள்ளது” என்கிறார். பேராசிரியர் அருள் சின்னையன் புற்றுநோயியல் துறையில் ஒரு முன்னோடியாக உள்ளார். கடந்த 2010-ம் ஆண்டு மிச்சிகன் புற்றுநோயியல் சிகிச்சை என்றதொரு திட்டத்தை ஆரம்பித்து செயல்படுத்தி வருகிறார்.

புற்றுநோய் பாதிப்புக்கான சிகிச்சை முறையில் மாற்றுக் கூறுகளைக் கண்டறிந்து அதற்குத் தகுந்தாற் போன்றதொரு சிகிச்சை முறையை மேற்கொள்வதற்கான வழிமுறைகளைத் தான் மிச்சிகன் புற்றுநோயியல் சிகிச்சை முறைத் திட்டம் செய்து வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பலராலும் கண்டறியப்படாத வழிமுறைகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தப் புதிய வழிமுறைகள் மூலம் புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகளை கூடுதல் மேம்பாடுகள் உடன் அளிக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ‘சரியான சிகிச்சை முறை எது என்பதை பாதிக்கப்பட்டவர்களே உணரும் வகையில் இதைப் பொது வெளியில் கொண்டு செல்வோம்’ எனக் கூறியுள்ளார் அருள் சின்னையன்.

.