This Article is From Jul 19, 2019

‘’சீனாவில் 10 லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்’’ : அமெரிக்கா

உலகில் மதங்களை பின்பற்ற உரிமை மறுக்கப்படும் அல்லது மதத்தை அச்சுறுத்தும் நாடுகளில்தான் 83 சதவீத மக்கள் வாழ்வதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

‘’சீனாவில் 10 லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்’’ : அமெரிக்கா

சிறுபான்மை மக்களுக்கு எதிராக சீனா ஒடுக்குமுறையை கையாள்வதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

Washington:

சீனாவில் மனித உரிமை மீறல் மிக மோசமாக உள்ளதாகவும், மதத்தை பின்பற்றுவதற்கு கிறிஸ்தவ, முஸ்லிம்களுக்கு உரிமை மறுக்கப்படுவதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

அமெரிக்காவில் மத சுதந்திரம் தொடர்பான அமைச்சரவை கூட்டத்தில் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது-

உலகில் பல நாடுகளில் மத சுதந்திரம் மறுக்கப்படுகிறது. அவற்றில் சீனாவும் ஒன்று. கடந்த 2017 ஏப்ரலில் இருந்து சீனவில் 10 லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் மற்றும் சிறுபான்மையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜிங்ஜியாங்கில் உள்ள முகாம்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

கடந்த ஆண்டு மதத்தை பின்பற்றியதற்காக பலுன் காங் மாகாண எம்.பி. சென் சுவா மூன்றரை ஆண்டுகள் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

2018 மேயில் சர்ச் பாதியார் ஈர்லி ரெய்னை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவர் இப்போது ஜெயிலில் இருக்கிறார். அமெரிக்காவில் நடக்கும் மத சுதந்திரம் தொடர்பான மாநாட்டிற்கு வரக்கூடாது என்று சில நாடுகளை சீனா மிரட்டியுள்ளது.

அவற்றை பொருட்படுத்தாமல் இங்கு வந்துள்ளவர்களை பாராட்டுகிறேன். மனிதர்கள் கடத்தப்படுவது எப்படி மிகப்பெரும் பிரச்னையாக அதனை முறியடிப்பது மாபெரும் முயற்சியாக எப்படி மாறியது? எல்லாம் தொடக்கம் முதல் இருந்து செய்யப்பட்ட பணிதான் இதற்கு காரணம்.

இவ்வாறு அவர் பேசினார்.

.