Read in English
This Article is From Oct 02, 2018

மகாத்மா காந்திக்கு உயரிய குடிமகன் விருது வழங்கி சிறப்பிக்க அமெரிக்கா திட்டம்!

அகிம்சை மற்றும் அமைதியை ஆயுதமாக கொண்டு விடுதலைக்காக போராடிய மகாத்மா காந்திக்கு தங்கப் பதக்கம் வழங்க அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

Advertisement
இந்தியா

அமைதி மற்றும் அகிம்சைக்கு முன்னேடியாக உலகெங்கும் அறியப்படுபவர் மகாத்மா காந்தி.

Washington:

ஒருவரின் மரணத்திற்கு பின் அவர் ஆற்றிய சேவையை கவுரவிக்கும் வகையில் அமெரிக்கா தங்கப் பதக்கம் வழங்கி சிறப்பித்து வருகிறது. அந்தவகையில், அகிம்சை மற்றும் அமைதியை ஆயுதமாக கொண்டு விடுதலைக்காக போராடிய மகாத்மா காந்திக்கு தங்கப் பதக்கம் வழங்க அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நியூயார்க்கில் கடந்த செப்.23ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில், அதன் உறுப்பினர்களான கரோலின் மலோனி, ஆமி பேரா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோ கண்ணா, பிரமிளா ஜெயபால், துளசி கப்பார்டு ஆகியோர் ஒரு தீர்மானம் கொண்டுவந்துள்ளனர். அதில், நாட்டின் உயரிய குடிமகன் விருதினை மகாத்மா காந்திக்கு வழங்கி கவுரப்படுத்த முடிவு செய்துள்ளனர்.

இந்த விருதினை, அமெரிக்க நாடாளுமன்றம் வெளிநாட்டவர்களில் புகழ்பெற்ற ஒருசிலருக்கு மட்டுமே வழங்கியுள்ளது. அதில், அன்னை தெரசா (1997), நெல்சன் மண்டேலா (1998), போப் இரண்டாம் ஜான் பவுல் (2000), தலாய் லாமா (2006), ஆங் சாங் சூகி (2008), முகமது யூனஸ் (2010), சீமோன் பீரிஸ் (2014) உள்ளிட்ட சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த அறிவிப்பானது கடந்த ஆகஸ்ட் மாதம் நியூயார்க் நகரில் நடைபெற்ற இந்திய தின அணிவகுப்பின் போது அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் கரோலின் மலோனியால் தெரிவிக்கப்பட்டது. மேலும் மலோனி கூறும்போது, அமைதி மற்றும் அகிம்சை வழி சத்தியாகிரக போராட்டத்தின் மூலம் உலகை ஈர்த்தவர் மகாத்மா காந்தி. அவரின் அமைதி வழி கொள்கைகள் நம்மையும் பிறருக்கு சேவை செய்ய தூண்டுகிறது. மகாத்மா காந்தியின் கொள்கையும், துணிவும் என்னை ஒவ்வொரு நாளும் ஈர்க்கிறது. அவரின் உயரிய கொள்கைகளை நாம் அனைவரும் பின்பற்றுவோம் என்று தெரிவித்தார்.

Advertisement