Read in English
This Article is From Jan 03, 2020

பாக்தாதில் அமெரிக்கா ஏவுகணை தாக்குதல்; ஈரான் ராணுவ தளபதி கொல்லப்பட்டார்!

காசிம் சோலிமானி உயிரிழந்ததை தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் தனது ட்வீட்டர் பதிவில் எந்த விளக்கமும் அளிக்காமல் அமெரிக்க கொடி படத்தை மட்டும் பதிவிட்டுள்ளார்.

Advertisement
இந்தியா Edited by

இரான் எதிர்காலத்தில் தாக்குதல் நடத்துவதை தடுக்கும் நோக்கத்தோடு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பென்டகன் தெரிவித்துள்ளது.

Washington:

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவின் பேரிலேயே ஈரான் புரட்சி பாதுகாப்பு படையின் தளபதி காசிம் சோலிமானி சுட்டுக்கொல்லப்பட்டதாக பென்டகன் தெரிவித்துள்ளது. மேலும், இது வெளிநாடுகளில் உள்ள அமெரிக்கர்களைப் பாதுகாப்பதற்கான ஒரு தீர்க்கமான தற்காப்பு நடவடிக்கையே என்றும் குறிப்பிட்டுள்ளது. 

இதுதொடர்பாக அமெரிக்க பாதுகாப்புத்துறை கூறியதாவது, ஈராக்கில் உள்ள அமெரிக்க அதிகாரிகள் உள்ளிட்டோரை தாக்க காசிம் சோலிமானி திட்டமிட்டிருந்ததாக தெரிவித்துள்ளது.

மேலும், நூற்றுக்கணக்கான அமெரிக்கர்கள் உயிரிழப்பதற்கும், ஆயிரக்கணக்காணோர் காயமடைந்ததற்கும் காசிம் சோலிமானியும் அவரது, புரட்சி படையுமே காரணம் என்றும் தெரிவித்துள்ளது. 

காசிம் சோலிமானி உயிரிழந்ததை தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் தனது ட்வீட்டர் பதிவில் எந்த விளக்கமும் அளிக்காமல் அமெரிக்க கொடி படத்தை மட்டும் பதிவிட்டுள்ளார். 

Advertisement

பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் நடந்த இந்த தாக்குதலில், ஈராக்கின் சிக்திவாய்ந்த ஹஷீத் கிளர்ச்சியாளர்கள் குழுவின் துணைத் தலைவரும் சுட்டுக்கொல்லப்பட்டார். 

ஈராக்கில் கடந்த வாரம் அமெரிக்கா நடத்திய தாக்குதலை கண்டித்து, ஈரான் படைகள் ஏற்கனவே அங்கிருக்கும் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியுள்ளது. 

Advertisement

இரான் எதிர்காலத்தில் தாக்குதல் நடத்துவதை தடுக்கும் நோக்கத்தோடு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பென்டகன் தெரிவித்துள்ளது. 

Advertisement