Read in English
This Article is From Mar 17, 2020

கொரோனாவை ‘சீன வைரஸ்’ எனக் குறிப்பிட்ட அதிபர் ட்ரம்ப்… மல்லுக்கட்டும் அமெரிக்கா - சீனா!

“சீன வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள விமானத் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளுக்கும் அமெரிக்க அரசு ஆதரவாக இருக்கும்”

Advertisement
உலகம் Edited by

இதற்கு முன்னரும் ட்ரம்புக்கு நெருக்கமாக இருந்த பல அரசு அதிகாரிகள் கொரோனாவை, சீனாவோடு சம்பந்தப்படுத்திப் பேசியிருந்த போதும், அவர் சொல்வது இதுவே முதன்முறை. 

Highlights

  • கொரோனா வைரஸுக்கு அமெரிக்காவும் காரணமாக இருக்கலாம்: சீனா
  • கொரோனாவுக்கு யார் காரணம் என்பது அனைவருக்கும் தெரியும்: ட்ரம்ப்
  • கொரோனா வைரஸை 'உஹான் வைரஸ்' என சொல்லி வருகிறது ட்ரம்ப் தரப்பு
Washington:

கோவிட்-19 என சொல்லப்படும் கொரோனா பரவலுக்கு நீங்கள்தான் காரணம் என்று அமெரிக்காவும் சீனாவும் மாறி மாறி குற்றம் சாட்டி வரும் நிலையில், பிரச்னையை பூதாகரமாக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா வைரஸுக்கு ‘சீன வைரஸ்' என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் சீன அரசுத் தரப்பு கொதிப்படைந்துள்ளதாக தெரிகிறது. 

அதிபர் ட்ரம்ப், தனது ட்விட்டர் பக்கத்தில், “சீன வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள விமானத் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளுக்கும் அமெரிக்க அரசு ஆதரவாக இருக்கும்,” என்று கருத்திட்டுள்ளார். இதற்கு முன்னரும் ட்ரம்புக்கு நெருக்கமாக இருந்த பல அரசு அதிகாரிகள் கொரோனாவை, சீனாவோடு சம்பந்தப்படுத்திப் பேசியிருந்த போதும், அவர் சொல்வது இதுவே முதன்முறை. 

உஹான் எனப்படும் சீன மாகாணத்தின் உணவுச் சந்தையிலிருந்துதான் இந்த கொரோனா வைரஸ், மிருகத்திலிருந்து மனிதர்களுக்குப் பரவியிருக்கும் என்று விஞ்ஞானிகள் கணிக்கின்றனர். இதற்கு ஸ்திரமான ஆதாரம் இதுவரை கிடைக்கவில்லை.

Advertisement

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர், சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளரான ஜாவ் லிஜியான், “கொரோனா வைரஸை உஹானுக்குக் கொண்டு வந்தது அமெரிக்க ராணுவமாக இருக்கலாம்,” என்று வெளிப்படையாகவே குற்றம் சுமத்தினார். 

அவர் தொடர்ந்து ஒரு வீடியோவையும் பகிர்ந்தார். அந்த வீடியோவில் அமெரிக்க சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர், “காய்ச்சல் காரணமாக அமெரிக்காவில் சமீபத்தில் இறந்தவர்களின் ரத்த மாதிரியைச் சோதனை செய்து பார்த்ததில் கோவிட்-19 பாதிப்பு இருந்தது தெரியவந்துள்ளது” என்கிறார்.

Advertisement

அந்த வீடியோவைப் பகிர்ந்து ஜாவ், “காய்ச்சல் காரணமாக அமெரிக்காவில் இறந்தவர்களில் எத்தனை பேர் கோவிட்-19 மூலம் இறந்தார்கள் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்,” என்று வலியுறுத்தியுள்ளார். 

இதனால் சீற்றமடைந்த அமெரிக்க அரசு தரப்பு, அமெரிக்காவுக்கான சீனத் தூதருக்குச் சம்மன் அனுப்பியுள்ளது. சீனத் தூதர் குய் டியான்காய்க்கு, ஜாவ் பேசியது குறித்து விளக்கம் அளிக்குமாறு சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

ஆசியாவுக்கான அமெரிக்க தூதர், டேவிட் ஸ்டூவர், டியான்காய்க்கு சம்மன் அனுப்பி, “உலக அளவில் தாக்கம் ஏற்படுத்தியுள்ள ஒரு நோய் குறித்து யாருக்கும் சொல்லாமல் இருந்துவிட்டு, அதைத் திசை திருப்பப் பார்க்கிறது சீனத் தரப்பு.

வதந்திகளை கிளப்பிவிடுவது முட்டாள்தனமானது. அது சீன மக்களுக்கும் உலகிற்கும் நல்லதல்ல,” என்று காட்டமாகக் கருத்து தெரிவித்துள்ளார். 
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உட்படப் பல அமெரிக்க அரசு தரப்பு அதிகாரிகளும் கொரோனா அல்லது கோவிட்-19 வைரஸை, தொடர்ச்சியாக ‘உஹான் வைரஸ்' என்று சொல்லி வருவது, பொய் பிரசாரத்தின் ஒரு பகுதிதான் என்று சீன தரப்பு குற்றம் சாட்டுகிறது. 

Advertisement

ஆனால் இன்னொரு தரப்போ, ‘சீனாவில்தான் இந்த வைரஸ் தொற்று உருவானது. அதை ஒப்புக் கொள்ளாமல், திசை திருப்பப் பார்க்கிறார்கள்' எனச் சொல்லப்படுகிறது. சீனாவில் நோய்த் தொற்று புயல் வேகத்தில் பரவியிருந்தாலும், தற்போது அங்கு அது பெரும் அளவுக்குக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பலர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளனர். இந்த விஷயத்தைப் பிரதானப்படுத்தி, நோய் ஆரம்பித்த விவகாரத்தை மறைக்கவே சீனா முயல்வதாகவும் சொல்லப்படுகிறது. 

கொரோனா பரவலைத் தொடர்ந்து நாடு தழுவிய அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது அமெரிக்க அரசு. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அதிபர் டொனால்டு டிரம்ப், சீனாவின் குற்றச்சாட்டு பற்றிப் பேசுகையில், “அவர்களுக்கு இந்த வைரஸ் எங்கிருந்து வந்தது என்று தெரியும். எல்லோருக்கும் தெரியும்,” என்று காட்டமாகப் பதில் சொன்னார்.

Advertisement


 

Advertisement