This Article is From Feb 23, 2020

'அமரேந்திர பாகுபலியாகிய நான்' - வைரலாகும் டொனால்ட் டிரம்ப் பகிர்ந்த ட்விட்டர் வீடியோ

வெளியான இந்த வீடியோவில் அதிபர் டிரம்ப் வாள்ச்சண்டை இடுவது போலவும், ரதத்தில் பயணம் செய்வது போலவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன

'அமரேந்திர பாகுபலியாகிய நான்' - வைரலாகும் டொனால்ட் டிரம்ப் பகிர்ந்த ட்விட்டர் வீடியோ

இந்த வீடியோ, பதிவிடப்பட்ட வெறும் 2 மணி நேரத்தில் சுமார் 17,000 முறை பகிரப்பட்டுள்ளது.

ஹைலைட்ஸ்

  • வெறும் 2 மணி நேரத்தில் சுமார் 17,000 முறை பகிரப்பட்டுள்ளது.
  • படத்திற்கு டொனால்ட் டிரம்ப் ட்விட்டரில் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளது
  • அவர்கள் ஆக்ராவில் உள்ள தாஜ் மஹாலை சுற்றிப்பார்க்கவுள்ளனர்
New Delhi:

அரசு முறை பயணமாக இந்தியா வரவிருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவிற்கு புறப்படும் முன் தனது ட்விட்டர் பக்கத்தில் (வேறொருவர் பதிவிட்ட) வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் 'பாகுபலி 2' படத்தில் அப்படத்தின் கதாநாயகன் வரும் காட்சிகளில் அந்த நாயகனின் முகத்திற்கு பதிலாக டிரம்பின் முகத்தை கிராபிக்ஸ் மூலம் மாற்றியுள்ளார். இதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து 'எனது இந்திய நண்பர்களை காண ஆர்வமாக உள்ளேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்'

'ஜியோ ரே பாகுபலி' என்ற பாடல் பின்னணியில் ஒலிக்க, அந்த வீடியோவில் டிரம்பின் மனைவியின் முகமும் கிராபிக்ஸில் இணைக்கப்பட்டிருக்கிறது. ரம்யா கிருஷ்ணன் நடித்த சிவகாமி என்ற கதாபாத்திரத்தின் முகத்திற்கு பதிலாக டிரம்பின் மனைவியின் முகம் கிராபிக்ஸில் மாற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் இந்திய பிரதமர் மோடியின் முகமும் ஒரு சில நொடிகள் காட்டப்பட்டுள்ளது. 

வெளியான இந்த வீடியோவில் அதிபர் டிரம்ப் வாள்ச்சண்டை இடுவது போலவும், ரதத்தில் பயணம் செய்வதுபோலவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் இந்த வீடியோவில் 'ஈவாங்கா டிரம்ப் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஜூனியர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். "அமெரிக்காவும் இந்தியாவும் ஒன்றுபட்டன" என்ற செய்தியோடு முடிவடையும் இந்த வீடியோ, பதிவிடப்பட்ட வெறும் 2 மணி நேரத்தில் சுமார் 17,000 முறை பகிரப்பட்டுள்ளது.  

கடந்த வெள்ளிக்கிழமை அன்று பாலிவுட்டில் வெளியான "கே ரோம்-காம்" திரைப்படமான "சுப் மங்கல் ஜியாடா சவ்தன்" படத்திற்கு டொனால்ட் டிரம்ப் ட்விட்டரில் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மெலனியா டிரம்புடன் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகிய இருவரும், பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள அகமதாபாத்திற்கு வரும் திங்கள்கிழமை வரவுள்ளார். விமான நிலையத்தில் அவர் தரையிறங்கியதும், பிரதமர் மோடி அவர்களை உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான 'மோட்டரோ' மைதானத்திற்கு அழைத்துச் செல்வார். அதன் பின் அவர்கள் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை சுற்றிப்பார்க்கவுள்ளனர்.

.