அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,448 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
Washington: சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 37 லட்சத்தினை கடந்திருக்கக்கூடிய நிலையில் தற்போது அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,448 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 75,543 ஆக அதிகரித்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் தெரிவிக்கின்றன.
உலக அளவில் கொரேனா தொற்றால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்நாட்டில் 12,54,750 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என பால்டிமோரை சார்ந்த பள்ளியின் தரவுகள் தெரிவித்துள்ளது.